புரட்டாசி மாத ராசி பலன் 2024:  பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்? திடீர் ஜாக்பாட்! 

Puratasi Matha Rasi Palangal 2024 : புரட்டாசி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு  என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம் : .

Sep 10, 2024 - 09:35
Sep 12, 2024 - 14:51
 0
புரட்டாசி மாத ராசி பலன் 2024:  பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்? திடீர் ஜாக்பாட்! 
puratasi month rasi palan dhanusu to Meenam 

Puratasi Matha Rasi Palangal 2024 : புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சூரியன் பயணம் செய்யும் மாதம். பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதம் புண்ணியம் நிறைந்த மாதம். இந்த மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மகாளய பட்சம் இந்த மாதத்தில்தான் வருகிறது. அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். இந்த மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி உள்ளது என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

தனுசு

குருவை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, புரட்டாசி மாதம் உங்க ராசிக்கு யோகாதிபதி சூரியன் 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். புதிய தொழில் தொடங்கலாம். வியாபாரத்தில் லாபம் வரும். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது.  கணவன் மனைவி இணக்கமான போக்கு அதிகரிக்கும். நெருக்கம் கூடும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்வதால் பெரிய பதவிகள் தேடி வரும். சுக்கிரன் லாப வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போவதால் வீடு மனை வாங்கலாம். கட்டிய வீட்டை வாங்கலாம். இந்த மாதம் நீங்கள் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை.  கடன் கிடைக்கிறதே என்று அதிகமாக கடன் வாங்கி கடனாளி ஆகி விட வேண்டாம்.   குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள்.  ஸ்ரீபைரவரை வணங்குங்கள். தானம் செய்யுங்கள் நன்மைகள் அதிகரிக்கும். 

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, சூரியன் இந்த மாதம் முழுவதும் பாக்ய ஸ்தானத்தில் கேது உடன் இணைந்து பயணம் செய்கிறார். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவைப்படும். பணத்தை யாருக்கும் கடனாக கொடுக்காதீர்கள் கொடுத்த பணம் திரும்ப வராது. பாக்ய ஸ்தானத்தில் சூரியன் புதனோடு இணைந்து வலுவாக இருப்பதால் புதிய தொழில் தொடங்கலாம். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணியில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். பாராட்டுக்கள் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  வீடு வாங்க, தொழில் தொடங்க உங்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். புது வீடு மாறும் யோகம் வரும். வேலை தொழிலில் இடம் மாற்றம் ஏற்படும்.  சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தடைகள் விலகும். பத்தாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று மாளவியா யோகம் கைகூடி வரப்போகிறது. பதவியோகம் தேடி வரப்போகிறது. திடீர் ஜாக்பாட் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். 

கும்பம்

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையை சிறுசிறு கருத்து மோதல்கள் வரலாம். வண்டி வாகனத்தில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. எதிர்பாலினத்தினருடன் கவனமாக பழகுங்கள். சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போவதால் பண வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். இந்த மாதம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கிடைக்கும். அம்மாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பணம் விசயத்தில் கவனமாக இருங்க. ஜாமீன் கையெழுத்து போட்டு யாருக்கும் பணம் வாங்கி கொடுக்காதீர்கள். பொருளாதாரத்தில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. வேலை செய்பவர்கள் உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுய தொழில் செய்பவர்கள் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு  நிறைய சாதகமான சம்பவங்கள் நடைபெறும். கடந்த ஒருமாதமாக ஆறாம் வீட்டில் இருந்த சூரியன் ஏழாம் வீட்டில் அமர்ந்து கேது உடன் இணைந்து உங்க ராசியை பார்ப்பதால் அரசு பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல யோகமான மாதம், பதவி உயர்வு தேடி வரும். யோகமான நேரம் கைகூடி வருகிறது. அரசியல்வாதிகள் வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உடல் உஷ்ணம் அதிகரிக்கும். எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் சுக்கிரன் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். பணம் பல வழிகளில் இருந்தும் வரும். வேலை விசயத்தில் கவனம் தேவை. அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow