Aavani Month Rasi Palan 2024 : ஆவணி மாத ராசி பலன் 2024: ஆடி போய் ஆவணி வந்தால் 6 ராசிக்காரர்களுக்கு டாப்!

Aavani Month Rasi Palanngal 2024 in Tamil : ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் பயணம் செய்வதால் சிம்ம மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஆடி போய் ஆவணி வந்தால் அத்தனை நன்மைகளும் தேடி வரும் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படிப்பட்ட சிறப்புமிக்க ஆவணி மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்று பார்க்கலாம்.

Aug 13, 2024 - 13:28
Aug 21, 2024 - 10:11
 0
Aavani Month Rasi Palan 2024 : ஆவணி மாத ராசி பலன் 2024: ஆடி போய் ஆவணி வந்தால் 6 ராசிக்காரர்களுக்கு டாப்!
Aavani Month Rasi Palanngal 2024 in Tamil

Aavani Month Rasi Palanngal 2024 in Tamil : சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று பயணம் செய்யும் ஆவணி மாதத்தில் நவ கிரகங்களின் பயணம் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக உள்ளது. சுக்கிரன், புதன், சூரியன் சிம்ம ராசியில் பயணிப்பது சிலருக்கு சாதகமான அம்சத்தை தரப்போகிறது. சனி, புதன் வக்ர நிலையில் பயணம் செய்யும் இந்த காலத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

மேஷம்:  

செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். சூரியனும் சுக்கிரனும் ஐந்தாம் இடத்தில் இணைந்திருப்பதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மனக்கவலை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்புவீர்கள்.  சுபகாரியம் வெற்றிகரமாக நடைபெறும்.

 

ரிஷபம்:  

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபராசிக்காரர்களே.. ஆவணி மாதத்தில் புதிய வீடு கட்டி மகிழ்ச்சியோடு புதுமனை புகுவிழா நடத்துவீங்க.  குலதெய்வ வழிபாடு செய்வதற்காக குடும்பத்தினரோடு ஆன்மீக பயணம் செல்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.  நிலம் வாங்கி விற்பதில் நல்ல லாபம் கிடைக்கும்.  பெருமையும் புகழும் அதிகரிக்கும். 

மிதுனம்:  

புதன் பகவானை அதிபதியாகக் கொண்ட புத்திசாலித்தனம் மிக்க மிதுன ராசிக்காரர்களே.. நினைத்த காரியத்தை நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.  மிக சாமர்த்தியமாக காய் நகர்த்துவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நீக்குப் போக்கோடு நடந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆசியால் சில ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து அழகுபடுத்துவீர்கள். 

கடகம்:  

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வாக்கில் சூரியன் கோபம் அதிகமாகும். 'ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்ரு' என்பதை மனதில் வைத்துக்கொள்ள மறக்காதீங்க. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிக லாபம் கிடைக்கிறதே என்று அகலக்கால் வைக்காதீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திடீர் வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். 

சிம்மம்:  

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே..  தொழில் துறைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். மற்றவர்களுக்கு செய்யும் உதவியால் சமூகத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். ஆசைப்பட்ட வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக வங்கியில் கடன் பெறுவீர்கள். உயர் கல்வி யோகம் கை கூடி வருகிறது. 

கன்னி:

அறிவின் நாயகன் புதன் பகவானை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே..  தொழில் துறைகளில் அலட்சிய போக்கை கடைபிடிக்காதீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் வேலை மாறுதலும் கிடைக்கும். ஆவணி மாதத்தில் கடலோரத்தில் அருள்பாலிக்கும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை வழிபடுங்கள் நல்லதே நடக்கும். 

மேலும் படிக்க : துலாம் முதல் மீனம் வரை - ஆவணி மாத ராசி பலன்கள் 2024

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow