மகாளய அமாவாசை முதல் நவராத்திரி பண்டிகை வரை.. புரட்டாசி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்

புரட்டாசி மாதத்தில் முன்னோர்களை வணங்கும் மகாளய பட்ச காலம் கடைபிடிக்கப்படுகிறது. நவராத்திரி பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.மாதம் முழுவதும் பண்டிகை நிறைந்த புரட்டாசி மாதத்தில் எந்த நாட்களில் என்ன பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.

Sep 16, 2024 - 09:55
 0
மகாளய அமாவாசை முதல் நவராத்திரி பண்டிகை வரை.. புரட்டாசி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்
purattasi month special viratham days

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியன் பயணம் செய்கிறார். கன்னி மாதத்தில் சூரியன், புதன், கேது கூட்டணி சேருகிறது. ஆன்மீக அலைகள் வீசும் மாதம் புரட்டாசி மாதம்.இந்த மாதத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமைகளில் மக்கள் விரதமிருந்து பெருமாளுக்கு படையலிட்டு வழிபடுவார்கள். இந்த மாதத்தில் எந்த நாளில் என்ன விஷேசம் கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம். 

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் அசைவ உணவு சாப்பிடுவதை தவித்து விடுவார்கள்.விரத மாதம் என்பதால் சைவ உணவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள்.திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். திருமலைக்கு செல்ல முடியாதவர்கள் 
திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப்  பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. 

புரட்டாசி சனிக்கிழமை நாளில் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர் மாவிளக்கு தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

புரட்டாசி 1 செவ்வாய்கிழமை பௌர்ணமி சத்ய நாராயணா பூஜை செய்ய ஏற்ற நாள்
புரட்டாசி 2 புதன்கிழமை மகாளய பட்சம் ஆரம்பம்
புரட்டாசி 4 வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி
புரட்டாசி 5 சனிக்கிழமை மகாபரணி 
புரட்டாசி 6 ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை விரதம்
புரட்டாசி 7 திங்கட்கிழமை சஷ்டி விரதம்
புரட்டாசி 11 வெள்ளிக்கிழமை சுக்கிர ஜெயந்தி
புரட்டாசி 12 சனிக்கிழமை அஜ ஏகாதசி 
புரட்டாசி 16 புதன்கிழமை மஹாளய அமாவாசை 
புரட்டாசி 17 வியாழக்கிழமை நவராத்திரி பூஜை ஆரம்பம்
புரட்டாசி 24 வியாழக்கிழமை பத்ரகாளி அவதார தினம்
புரட்டாசி 25 வெள்ளிக்கிழமை மகா நவமி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
புரட்டாசி 26 சனிக்கிழமை விஜய தசமி
புரட்டாசி 28 திங்கட்கிழமை பாபாங்குச ஏகாதசி 
புரட்டாசி 29 செவ்வாய்கிழமை ருண விமோசன பிரதோஷம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow