பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர விரதம்.. அம்மனுக்கு வளையல் கொடுத்தால் தொட்டில் ஆடும் - புராண கதை

ஆடிப்பூரம் நாளில் விரதம் இருந்து கோவிலில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் வீட்டில் தொட்டில் ஆடும் என்பது நம்பிக்கை.

Aug 7, 2024 - 12:42
 0
பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர விரதம்.. அம்மனுக்கு வளையல் கொடுத்தால் தொட்டில் ஆடும் - புராண கதை
aadi pooram valaikappu


ஆடிப்பூரம் நாளில் விரதம் இருந்து கோவிலில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் வீட்டில் தொட்டில் ஆடும் என்பது நம்பிக்கை. 

ஆடிப்பூர விரதம் இருந்தால் பிரிந்தவர்கள் கூடுவார்கள். பகைவர்களும் நண்பர்கள் ஆவார்கள். ஆடிப்பூரம் தினமான இன்றைய தினம் அம்மன் கோவிலுக்கு சென்று வளையல் வாங்கிக் கொடுக்கலாம். கோவிலுக்கு வரும் இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. சைவ தலங்களிலும் வைணவ தலங்களிலும் ஆடிப்பூரம் விருது விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் இன்று இரவு வரை உள்ளது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களிலும் நடைபெறும் திருக்கல்யாணத்திலும், வளைகாப்பிலும் பக்தர்கள் பங்கேற்பது சிறப்பு என்று கூறப்படுகிறது. 

ஆண்டாள் திருக்கல்யாணத்திலும், அம்மன் வளைகாப்பிலும் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பில் வழங்கப்படும் வளையல்களை அணிவதால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.


ஆடிப்பூரத் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ரெகுபதி கிருஷ்ண கொண்டம்மாள் திருக்கோவிலில் 7ம் ஆண்டுவளையல் அலங்காரம் மற்றும் விளக்கு பூஜை நடைபெற்றது.அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 40 ஆயிரத்து எட்டு வளையல்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதனையடுத்து உலக நன்மை வேண்டியும்,மழை பொழிய வேண்டியும் 508 விளக்கு பூஜையும் நடைபெற்றது.ஒரே மாதிரியான உடை அணிந்த 508 பெண் பக்தர்கள் விளக்கு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.நிறைவாக சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும்.இந்த விழாவில் கட்ராம்பட்டி மட்டுமல்லாது சுற்று வட்டாரபகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற சாமி தரிசனம் செய்வார்கள் எனவும் அம்மனை வேண்டும் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

குழந்தை வரம் கேட்கும் பெண்களுக்கும் குழந்தை பிறக்கும்,மனக் கவலையோடு வேண்டும் பக்தர்களுக்கு மனக்கவலை நீங்கி வாழ்வில் சந்தோசம் கிடைக்கும் அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது வேண்டுகோளை வைப்பார்கள் என பக்தர்கள் தெரிவித்தனர்.


பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? அதற்கான புராண கதையைப் பார்க்கலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வளையல் வியாபாரி சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார்.

இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். 

அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். "நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்று கூறி மறைந்தார் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow