ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024: காதல் திருமணம் யாருக்கெல்லாம் கைகூடும்.. யாரெல்லாம் கவனம்!

August Month Rasi Palangal 2024 in Tamil : சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் கூட்டணியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்த யாரெல்லாம் பலனடையப்போகிறார்கள்

Jul 31, 2024 - 05:45
Jul 31, 2024 - 11:59
 0
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024: காதல் திருமணம் யாருக்கெல்லாம் கைகூடும்.. யாரெல்லாம் கவனம்!
August Month Rasi Palangal 2024 in Tamil

August Month Rasi Palangal 2024 in Tamil : ஆகஸ்ட் மாதம் ஆங்கில வருடத்தின் 8வது மாதம் நவ கிரகங்களின் தலைவன் சூரியன் கடக ராசியில் 15 நாட்களும் சிம்ம ராசியில் 15 நாட்களும் சஞ்சரிப்பார். இப்போது கடகத்தில் இருக்கும் கிரகங்களின் கூட்டணி ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு மேல் சிம்மத்தில் இணைகின்றன. சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் கூட்டணியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்த யாரெல்லாம் பலனடையப்போகிறார்கள் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். 

விருச்சிகம்

ஏழாம் வீட்டில் உள்ள குரு, செவ்வாயின் பார்வை மாதம் முழுவதும் உங்கள் ராசிக்கு நேர் எதிரே ஏழாம் வீட்டில் இணைந்திருப்பதால் 
மனதில் பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் முன்னேற்றத்தைத் தரும். ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் பத்தாம் வீட்டில் சூரியன் ஆட்சி பெற்று பயணம் செய்யப்போகிறார். புதன் சுக்கிரன் உடன் சூரியன் இணைவதால் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.  வீடு சொத்து வாங்குவீர்கள்.  மனதில் தைரியம் அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமையப்போகிறது. 

தனுசு

ஆகஸ்ட் மாதத்தில் கிரகங்களின் பயணம் சாதகமாகவே உள்ளது. நவ கிரகங்களின் பயணம் மாதம் முழுவதும் சாதகமாகவே உள்ளது. அரசு தேர்வு எழுதிவிட்டு வேலைக்காக காததிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். ஆறாம் வீட்டில் செவ்வாய் குரு சேர்ந்திருப்பதால் விபரீத ராஜயோகம் தேடி வரும். செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் காதல் மணியடிக்கும். மாத முற்பகுதியில் சூரியன் 8ஆம் வீட்டில் இருப்பதால் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் பாக்ய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பலத்தோடு அமரப்போகிறார். கூடவே புதனும் இணைந்து புதாத்திய யோகம் கிடைக்கப்போகிறார். சூரியன், புதன், சுக்கிரன் இணைந்து மகாலட்சுமி யோகத்தையும் தரப்போகின்றனர். 
ஆகஸ்ட் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. 

மகரம் 

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் குரு இணைந்து மாதம் முழுவதும் குரு மங்கள யோகத்தை தருகின்றனர். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் இந்த மாதத்தில் பண வருமானம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார் குரு பகவான். அதே நேரத்தில் ஏழாம் வீட்டில் உள்ள சூரியன் மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டிற்கு நகரப்போகிறார். புதன் , சுக்கிரன் எட்டாம் வீட்டில் இணைந்திருக்கும் நேரத்தில் சூரியனும் இணைகிறார். பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் பத்திரப்படுத்துங்கள். பேச்சில் நிதானம் அவசியம். 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சோதனைகளும் சாதனைகளும் நிறைந்த மாதம்.  ஜென்ம சனி பாடாய் படுத்தி எடுக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் உள்ள ராகு அவ்வப்போது மன குழப்பத்தை ஏற்படுத்துவார். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பண விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது கவனம் தேவை. மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டில் சூரியன்,புதன்,சுக்கிரன் இணைந்து பயணம் செய்வதால் திருமண சுப காரியம் கைகூடி வரும். மன மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். 

மீனம் 

உங்கள் ராசிநாதன் குருபகவான் மூன்றாம் வீட்டில் செவ்வாயுடன் இணைந்து பயணம் செய்கிறார். குரு பகவானின் லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது.  வீடு கட்ட  வங்கிக் கடன் கிடைக்கும். ராசியில் உள்ள  ராகு மன உளைச்சலை ஏற்படுத்துவார். சுக்கிரன், சூரியன் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டிற்கு சென்று ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகத்தை கொடுக்கப்போகிறது. அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். கெடுபலன்கள் குறையும் நன்மைகள் நடைபெறும். திடீர் பண வருமானம் வந்து திக்கு முக்காட வைக்கப்போகிறது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow