சென்னை: எஸ்ஜே சீனு இயக்கத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பேட்ட ராப். இப்படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக பேட்ட ராப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபுதேவா, சன்னி லியோன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன், தற்போது தமிழ் உட்பட பல மொழிகளிலும் கிளாமர் கேரக்டர்களில் மட்டும் என்ட்ரி கொடுத்து வருகிறார்.
அந்த வரிசையில் பிரபுதேவாவுடன் இணைந்து பேட்ட ராப் படத்திலும் சன்னி லியோன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பேட்ட ராப் பட விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, சன்னி லியோனை மேடையில் வைத்துகொண்டே அவர் பற்றி பேசியது வைரலாகி வருகிறது. அதாவது சன்னி லியோன் அருகில் அமர்ந்திருந்தாலும் அவருடன் பேச முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். முக்கியமாக இந்தி தெரியாததால் தான் சன்னி லியோனுடன் பேச முடியவில்லை எனவும் இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு ‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிட்டு இருந்தாங்க. அதேமாதிரி இந்தி தெரியாது போடான்னு டீஷர்ட்லாம் போட்டாங்க, அதெல்லாம் பார்க்க சந்தோஷமாக இருந்தது. ஆனா, இப்பதான் இந்தி தெரியலையேன்னு ரொம்ப கவலையா இருக்கேன். பக்கத்துலயே சன்னி லியோன் இருக்காங்க, ஆனா அவங்க கிட்ட இரண்டு வார்த்தை கூட இந்தில பேச முடியல. இதுக்காகவாது இந்தி கத்துக்கணும். தமிழ் மட்டும் தெரிஞ்சதால இந்த மாதிரி நேரங்களில் பல இழப்புகளை சந்திப்பதாகவும் இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து இயக்குநர் பேரரசுவை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். “அவங்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும்; மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துடீங்க” என கமெண்ட்ஸ் போட்டு பேரரசுக்கு தக் லைஃப் கொடுத்து வருகின்றனர். இன்னும் சிலரே சன்னி லியோன் கிட்ட பேசுறதுக்காக இந்தி கத்துக்கணும்ன்னு சொன்ன இயக்குநர் பேரரசுவோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையான்னும் கேள்வி மேல் கேள்வி கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.