ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024: சிம்ம ராசியில் ஆட்சி பெற்ற சூரியன்.. விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்

August Month Rasi Palan 2024 in Tamil : ஆகஸ்ட் மாதத்தில் கிரகங்களின் கூட்டணி நெருப்பு ராசியான சிம்ம ராசியில் இணையப்போவதால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது. யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று பார்க்கலாம்.

Jul 30, 2024 - 05:00
Aug 1, 2024 - 11:49
 0
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024: சிம்ம ராசியில் ஆட்சி பெற்ற சூரியன்.. விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்
August Month Rasi Palan 2024

August Month Rasi Palan 2024 in Tamil : ஆகஸ்ட் மாதம் ஆங்கில வருடத்தின் 8வது மாதம் நவ கிரகங்களின் தலைவன் சூரியன் கடக ராசியில் 15 நாட்களும் சிம்ம ராசியில் 15 நாட்களும் சஞ்சரிப்பார். இப்போது கடகத்தில் இருக்கும் கிரகங்களின் கூட்டணி ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு மேல் சிம்மத்தில் இணைகின்றன. சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் கூட்டணியால் கடகம், சிம்மம், கன்னி, துலாம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

ஆகஸ்டில் நவ கிரகங்களின் பயணம்:

ஆகஸ்ட் மாதம் ஆடி மாதமும் ஆவணி மாதமும் இணைந்த மாதம். ஆகஸ்ட் மாதத்தில் கடக ராசியில் சூரியன், சிம்ம ராசியில் புதன், சுக்கிரன், கன்னி ராசியில் கேது, கும்ப ராசியில் சனி வக்ரம்,மீன ராசியில் ராகு, ரிஷப ராசியில் செவ்வாய், குரு, மிதுன ராசியில் சந்திரன் என கிரகங்களின் பயணம் உள்ளது. ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் சூரியன், புதன், சுக்கிரன் கூட்டணி சேருவதால் ஆடி போயி ஆவணி வந்தால் யாரெல்லாம் டாப்பாக வருவார்கள் என்று கணிக்கலாம். ஆகஸ்ட் மாதத்தில் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பார்க்கலாம். 


கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆசைப்பட்டவை நிறைவேறும். புது வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  17ஆம் தேதி சூரியன் இரண்டாம் வீட்டிற்கு நகர்ந்து ஆட்சி பெற்று அமர்வதால் நன்மைகள் நடைபெறும். சுக்கிரனும் இரண்டாம் வீட்டிற்கு வருவதால் தன வருமானம் அதிகரிக்கும். வேலையில் உயர்வு கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  புதிய வேலை கிடைக்கும் சம்பள உயர்வு அதிகரிக்கும். திருமணத்திற்கு எதிர்பார்த்து காத்திருக்கும் ஆண்களுக்கு மனதிற்கு பிடித்த மனைவி அமைவார். நன்மைகள் நடைபெறும் மாதம்.

சிம்மம்: 

சூரியனின் பலத்தால் இந்த மாதம் உங்களுக்கு உற்சாகம் கூடும். விரைய ராசியில் உள்ள ராசிநாதன் சூரியன், உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார்.  ராசியில் 3 கிரகங்கள் இணைவதால் எதிர்பாராத பதவி கிடைக்கும் பணவருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். மூன்று கிரகங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை பார்ப்பதால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். சிம்ம ராசிக்காரர்களுக்கு மாதத்தின் முதல்பாதி சுமாராக இருந்தாலும் மாதத்தின் இரண்டாம் பாதியில் நன்மைகள் அதிகம் நடைபெறும். 

கன்னி:  

ஆகஸ்ட் மாதத்தில் லாப வீட்டில் உள்ள சூரியனால் பண வருமானம் வரும். புதிய வேலை கிடைக்கும். உங்க ராசிநாதன் புதன் சூரியன், சுக்கிரன் உடன் இணைந்து விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். செய்யும் முயற்சியில் தடை தாமதங்கள் அதிகமாகும். ராசியில் உள்ள கேதுவினால் மன உளைச்சல் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண சுப காரியம் கைடும். ஆகஸ்ட் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கல்யாண வைபோகம் கூடி வரப்போகிறது.  

துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பணவருமானம் அதிகரிக்கும். அஷ்டமத்து குரு திடீர் திருப்பங்களைத் தருவார். லாப ஸ்தானத்தில்  சூரியன் சுக்கிரன்  புதன் கூட்டணி அமைத்து பயணம் செய்வது நன்மையான காலம். பெண்களுக்கு   திருமண வரன் கைகூடி வரும்.  திருமணமான தம்பதியினருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிறப்பான காலம் இது. மாணவர்களுக்கு புதன் நகர்வினால் கல்வியில் வெற்றிகரமான பயணமாக அமையும்.  மொத்தத்தில் வருமானம் கூடும் வேலையில் இருப்பவர்களுக்கு புதிய டிரான்ஸ்பர் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு மன திருப்தியை தரும் மாதம் இதுவாகும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow