அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுது... வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 19) இரவுக்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Sep 19, 2024 - 18:48
 0
அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுது... வானிலை ஆய்வு மையம் தகவல்!
அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுது

கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. தென்தமிழகம், புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 
 
19.09.2024 மற்றும் 20.09.2024: தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

21.09.2024 முதல் 25.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில்  அடுத்த 2 தினங்களுக்கு (19.09.2024 மற்றும் 20.09.2024)  வெப்பநிலை  ஒருசில  இடங்களில்  2°- 4°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு: 

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை   பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை   பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
   
தமிழக கடலோரப்பகுதிகள்: 

19.09.2024 முதல் 23.09.2024 வரை: மன்னார்   வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

மேலும் படிக்க: BiggBoss: பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகும் ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித்..? பஞ்சாயத்து கன்ஃபார்ம்!

வங்கக்கடல் பகுதிகள்:

19.09.2024 முதல் 23.09.2024 வரை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow