சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் அடையாளம்பட்டு பகுதியில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மணீஷா ரானா (40). இவருக்கு சொந்த மாநிலம் பீகார். இவரது கணவர் ரோகித் ராணா. இவர்களுக்கு 2 குழந்தைகள். ரோகித் ராணா பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதன்மை மேலாளராக உள்ளார்.
நகையை பறிக்க முயற்சி
நேற்று இரவு வீட்டிற்கு கணவர் வரும் நேரம் என்பதால் மனீஷா ராணா கதவை பூட்டாமல் வைத்து இருந்தார். அப்போது வீட்டின் கதவை மெதுவாக திறக்கும் சத்தம் கேட்டது. வந்து பார்த்த போது அடையாளம் தெரியாத நபர் வீட்டிற்குள் வந்ததாக தெரிகிறது. குல்லா அணிந்து இருந்தது.
Read more: தனுஷ் விவகாரம்: “3 கோடி அட்வான்ஸ்க்கு 16 கோடி கேட்பதா...” - ஆர்.கே.செல்வமணி விளக்கம்
யார் என்று கேட்ட போது அவருடைய தங்க நகையை பறிக்க முயன்றதால் பயந்து அறைக்குள் கதவை மூட முயன்ற போது கழுத்து, வாய் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் கூச்சலிட்டதும் தப்பி விட்டார். இது குறித்து மனீஷா ராணா வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
போலீசார் விசாரணை
இந்த புகார் குறித்து வானகரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை பறிக்க முயன்றது திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ரவுடி சதீஷ் என்ற சச்சின் என்பது தெரியந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். சச்சின் மீது 10 வழக்குகள் உள்ளது. கைதானவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தி வருகின்றனர்.