தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி ) யூனியன் தலைவர் ஆர்.கே செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அன்பு சகோதரி கலைச்செல்வி கதிரேசனுக்கு , வணக்கம். நீங்கள் எனக்கு 31.3.2025 அன்று எழுதிய கடிதம், இன்றைய தினம் சமூக வலைத்தளங்களிலிருந்து, என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பெற்றுக்கொண்டேன்.
தனுஷுக்கு 3 கோடி அட்வான்ஸ்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தனுஷிடம் Call sheet கேட்டு நீங்கள் புகார் அளிக்கவில்லை.தாங்கள் சில வருடங்களுக்கு முன்னால் தனுஷுக்கு 3 கோடி அட்வான்ஸ் கொடுத்ததாகவும், அதை இப்போது அவர் 16 கோடியாக திருப்பி தர வேண்டும் என்பது தான் தாங்களும், தங்கள் கணவரும் அளித்த புகார்.
Read more: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்- முதலமைச்சர் கடும் எதிர்ப்பு
3 கோடி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, 16 கோடி கேட்பது நியாயம் இல்லை என நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவித்த போது, நாங்கள் வட்டிக்கு வாங்கி, பணம் கொடுத்துள்ளோம். எனவே வட்டி எல்லாம் சேர்த்து இந்த நாள் வரை 16 கோடி ஆகிறது. எனவே தனுஷ் அவரிடம் 16 கோடி வாங்கி தர வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை. நாம் வட்டி கடை நடத்தவில்லை, சங்கம் நடத்துகிறோம். எனவே இது சரியல்ல என நடிகர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சங்கம் நிர்வாகிகள் சம்மந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை செய்து அதிக பட்சம் 3 கோடிக்கு இரண்டு மடங்காக 6 கோடி வரை பெற்று தர முடியும் என தெரிவித்தனர். அதை Five Star நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகிய கதிரேசன் ஏற்கவில்லை.
ரூ.8 கோடி தர சம்மதம்
நடிகர் சங்க நிர்வாகிகள் அளித்த உறுதி படி நடிகர் சங்கம் சார்பில் நாசர், பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் போன்ற நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் தனுஷிடம் பேசி "7 கோடி வரை பெற்று தரலாம் சம்மதமா?" என கேட்டார்கள். ஆனால் அதற்கும் உங்கள் கணவர் கதிரேசன் சம்மதிக்கவில்லை.
Read more: மருதமலையில் சாமியார் வேடத்தில் வெள்ளி வேல் திருட்டு- சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி
ஏற்கனவே நாங்கள் அக்டோபர் 30க்குள் ஒரு நல்ல நியாயம் பெற்று என உறுதி அளித்தாலும், முரளி மற்றும் ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்றும் சம்மந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து பேசி வந்தோம். அதன் 8 கோடி வரை பெற இயலும் என்ற நிலையை எய்தினோம். இறுதியாக தனுஷ் "அண்ணா இந்த தொகை நியாயம் இல்லை என்றாலும் உங்களுக்காகவும், சங்க வேண்டுகோளுக்காகவும் மட்டுமே நான் இதற்கு சம்மதிக்கிறேன். இதற்கு மேல் ஒரு ரூபாய் கூட வழங்க நான் தயாராக இல்லை வேண்டுமானால் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லட்டும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று கண்டிப்புடன் கூறி விட்டார்.
இதை நான் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் என அனைவரும் இருக்கும்போது நாங்கள் தெரிவித்தோம்.
எங்களை துண்டாதீர்கள்
ஆனால் தங்கள் கணவர் கதிரேசன் இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக 15 கோடி தந்தால் மட்டுமே ஒப்புக் கொள்வேன் என்று கூறிவிட்டார். இதில் நியாயம் இல்லை என்று நாங்களும், நடிகர் சங்கமும் நினைத்ததால் இனி இந்த பிரச்சனையில் தலையிட இயலாது என்று தங்கள் கணவரிடமும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடமும் தெரிவித்துவிட்டோம்.
அன்புள்ள சாகோதரியே நடந்ததில் சிறு பகுதியை மட்டுமே தங்களுக்கு, கடிதமாக எழுதி உள்ளேன். நட்பு கருதியும், நாகரிகம் கருதியும் பல விஷயங்களை நான் எழுத விரும்பவில்லை என்றும் எப்போதும் நட்புடனே இருக்க விரும்புகிறேன், எங்களை துண்டாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.