Today Rasi Palan: இன்றைய ராசிபலன் - மவுன விரதம் இருக்க வேண்டியது யார்?

Today Rasi Palan 2024 in Tamil : ஆடி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் சந்திரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் சுக்கிரன் புதனுடன் கூட்டணி சேர்ந்து பயணம் செய்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Aug 6, 2024 - 05:00
Aug 6, 2024 - 11:43
 0
Today Rasi Palan: இன்றைய ராசிபலன்  - மவுன விரதம் இருக்க வேண்டியது யார்?
Today Rasi Palan 2024 in Tamil

Today Rasi Palan 2024 in Tamil : நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 21ஆம் நாள் ஆகஸ்ட் 06ஆம் தேதி செவ்வாய்கிழமை துவிதியை திதி இரவு  07.53 மணி வரை அதன் பிறகு திருதியை திதி. மகம் நட்சத்திரம் மாலை 5.33 மணி வரை அதன் பிறகு பூரம் நட்சத்திரம்.  சந்திரனின் பயணத்தாலும் புதன் சுக்கிரன் உடனான கூட்டணியாலும் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்(Rasipalan) கிடைக்கும் என்று பார்க்கலாம். 

மேஷம்

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 3 கிரகங்கள் கூடியுள்ளன.சந்திரன் உங்களுடைய ராசிக்கு(Mesham Rasipalan) சாதகமாக பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். உறவினர்கள் மூலம் திருமணம் சுப காரியங்கள் நடைபெற பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பண வரவு, பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். இன்று மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் சம்பவங்கள் நடைபெறும். 

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு(Rishabam Rasiapalan) நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் சுகமான நாளாக அமையும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும், பயணங்களை தவிர்க்கவும் வீண் பிரச்சினை ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

மிதுனம்

சந்திரன் உங்க ராசிக்கு(Mithunam Rasipalan) மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் சுக்கிரன் புதனோடு இணைந்து பயணம் செய்கிறார். உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர்கள் மூலம் பணம் வரும் சுப செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையால் லாபம் கூடும். கணவன் மனைவி பிரச்சினை தீரும். கடன் பிரச்சினை கட்டுப்படும். வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். 

கடகம்

சந்திரன் உங்க ராசிக்கு(Kadagam Rasipalan) இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் உற்சாகமாக இருக்கலாம். பணவரவு உங்களை சந்தோஷப்படுத்தும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு லாபத்தை கொடுக்கும். மனதிலும் உடலிலும் தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் வரும்.

சிம்மம்

சந்திரன் உங்க ராசியில் பயணம் செய்கிறார். உங்களின் மனதில் சின்னச் சின்ன குழப்பம் வரலாம் உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். பெற்றோருடன் இருந்த பிரச்சினை குறையும். உங்களின்  குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளினால் நன்மை நடைபெறும்.   நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும்.

கன்னி

சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் தொழில் வியாபாரத்தில் வரவை காட்டிலும் திடீர் செலவுகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களுடன் பேசும் போது கவனமாக இருக்கவும்.

துலாம்

சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானமும் அதன் மூலம் வங்கி சேமிப்பும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும்.  பணம் கொடுக்கல் வாங்கல் லாபத்தை கொடுக்கும்.  நண்பர்களால் உதவிகள் வீடு தேடி வரும். 

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி சம்பவங்கள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பத்தாம் வீட்டில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளதால் பதவி யோகம் தேடி வரப்போகிறது. 

தனுசு

சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். பாக்கியங்கள் தேடி வரும். நினைத்த காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். இன்றைய தினம் உங்களுக்கு சில சங்கடங்கள் வரலாம் சமாளிக்க தயாராகுங்கள். நண்பர்கள் மூலம் இன்றைய தினம் மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். 

மகரம்

இன்றைய தினம் சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வண்டி வாகனங்களில் கவனமாக இருக்கவும். உங்க உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரலாம் கவனம். நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் வரலாம் கவனமாக இருக்கவும். 

கும்பம்

சந்திரனின் சஞ்சாரம் இன்று உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். காதலை சொல்ல ஏற்ற நாள். கணவன் மனைவி நெருக்கம் கூடும். பொருளாதார நிலை உயரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். வேலையில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் மூலம் சுப செய்தி தேடி வரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். கடன் பிரச்சினைகள் தீரும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow