Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 09 - நாக பஞ்சமி நாளில் 5 ராசிக்காரர்களுக்கு யோகம்

Today Horoscope Predictions in Tamil: சுக்கிரன் அருள் நிறைந்த வெள்ளிக்கிழமையாள இன்றைய தினம் சந்திரன் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் கேது உடன் கூட்டணி சேர்ந்து பயணம் செய்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Aug 9, 2024 - 04:30
Aug 9, 2024 - 16:33
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 09 -  நாக பஞ்சமி நாளில் 5 ராசிக்காரர்களுக்கு யோகம்
Today Rasi Palan 2024

Today Horoscope Predictions in Tamil:நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 24ஆம் நாள் ஆகஸ்ட் 09ஆம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி இரவு 03.14 மணி வரை அதன் பிறகு சஷ்டி திதி. ஹஸ்தம் நட்சத்திரம் இரவு 02.44மணி வரை அதன் பிறகு சித்திரை நட்சத்திரம்.  நாக பஞ்சமி, கருடபஞ்சமி  விழா கொண்டாடப்படும் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் அவசியம். அவசரப்பட்டு வாக்கு கொடுக்க வேண்டாம். 

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. தொழிலில் அதிக அளவில் இன்று முதலீடு செய்ய வேண்டாம். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை கொடுக்கும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செலவு செய்வதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும்.

கடகம்

சந்திரன் இன்றைக்கு உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் உள்ள பிரச்சினை குறையும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும் சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும்.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறையும் நிம்மதி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை விசயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். 

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் கேது உடன் இணைந்து பயணம் செய்கிறார் உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சிலருக்கு  தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். சமூகத்திலும் வேலை செய்யும் இடத்திலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் முன்பு நன்றாக படித்து பார்த்து கையெழுத்து போடுவது நல்லது. 

துலாம்

சந்திரன் இன்றைக்கு உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். கடன்கள் ஒரளவு குறையும். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மனைவி மூலம் பணம் வருமானம் வரும் வங்கி சேமிப்பு உயரும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் நடக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும்.  உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களுடைய உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும் வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவருமானம் சுமாராக இருக்கும். பயணங்களால் நன்மை அதிகரிக்கும். 

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட கால தாமதமாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. உங்க வேலையில் கவனம் தேவை. உங்களுக்கு மன அமைதி குறையும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்.

மீனம்

சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.  திறமை அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.  குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களுக்கு  தொழில் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow