Aug 9 OTT Release: தாத்தா வர்றாரு... இந்தியன் 2 பார்க்க ரெடியா... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

கமலின் இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. இதனுடன் மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகவுள்ளன.

Aug 8, 2024 - 21:38
 0
Aug 9 OTT Release: தாத்தா வர்றாரு... இந்தியன் 2 பார்க்க ரெடியா... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
August 9 OTT Release

சென்னை: இந்த வாரம், ஓடிடி ரசிகர்களை கதற விட இந்தியன் தாத்தா களமிறங்கவுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமாக உருவான இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வெளியான முதல் நாளில் இருந்தே இந்தியன் 2 படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. முக்கியமாக கமலின் நடிப்பையும் இந்தியன் தாத்தா கெட்டப்பையும் கூட விட்டு வைக்காமல் நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்தனர். 

இதுவரை இந்தியன் 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை கூட படக்குழு அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்தியன் 2 நாளை (ஆக.9) முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அதன்படி, நெட்பிளிக்ஸில் வெளியாகும் இந்தியன் 2 படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பார்க்கலாம். நெகட்டிவான விமர்சனங்களால் இந்தியன் 2 படத்தை தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள், ஓடிடியில் பார்க்க ரெடியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் சூப்பர் ஹிட்டான டர்போ திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. மல்லுவுட் மெகா ஸ்டாரான மம்முட்டியின் ஆக்ஷன் ட்ரீட்டாக உருவான இந்தப் படத்தை, வைசாக் இயக்கியிருந்தார். டர்போ படத்தின் கிளைமேக்ஸில் விஜய் சேதுபதியும் வாய்ஸ் கொடுத்து மாஸ் காட்டியிருந்தார். பாக்ஸ் ஆபிஸில் 70 கோடி ரூபாய் வரை வசூலித்த டர்போ, சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தியன் 2 வரிசையில் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கப் போகும் திரைப்படம் டர்போவாக தான் இருக்கும். அதேபோல், மலையாளத்தில் நடன்ன சம்பவம் (Nadanna Sambhavam) திரைப்படம், இந்த வாரம் முதல் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

தெலுங்கில் இந்த வாரம் 7ஜி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கன்னடத்தில் லவ்லி என்ற திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. இந்தியில், சந்து சாம்பியன் (Chandu Champion) அமேசான் ப்ரைம் தளத்திலும், குட்சாடி (Ghudchadi) ஜியோ சினிமாவிலும் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மேலும், ஃபிர் ஆயி ஹசீன் தில்ருபா (Phir Aayi Hasseen Dillruba) என்ற ரொமாண்டிக் திரில்லர் திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல், லைஃப் ஹில் கயி (Life Hill Gayi) என்ற வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஓடிடியிலும், கியாரா கியாரா (Gyaarah Gyaarah) வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்திலும் இந்த வாரம் வெளியாகின்றன.

மேலும் படிக்க - விரைவில் நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமணம்

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், லோலா அண்ட் தி கிட் (Lola And The Kid) என்ற ஆங்கில திரைப்படமும், மிஷன் கிராஸ் (Mission Cross) என்ற கொரியன் திரைப்படம் இந்த வாரம் வெளியாகின்றன. அதேபோல், Romance In The House என்ற கொரியன் வெப் சீரிஸும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow