சினிமா

GOAT In IMAX: ஐமேக்ஸில் வெளியாகும் கோட்... Wow! தெறிக்க விடும் விஜய்யின் புதிய போஸ்டர்!

விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தை ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் பார்க்கலாம் என அறிவித்துள்ள படக்குழு, விஜய்யின் தெறி மாஸ்ஸான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

GOAT In IMAX: ஐமேக்ஸில் வெளியாகும் கோட்... Wow! தெறிக்க விடும் விஜய்யின் புதிய போஸ்டர்!
The Greatest Of All Time experience in IMAX

சென்னை: தளபதி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள தி கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என பெரும் நட்சத்திரக் கூட்டணியே இப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கோட் ரிலீஸாக இன்னும் 28 நாட்கள் மட்டுமே இருப்பதால், இத்திரைப்படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்களை வெளியாகி வருகின்றன.  

முன்னதாக மூன்று பாடல்களும், விஜய்யின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகியிருந்தது. இதில் பாடல்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்தபடி வரவேற்பு கிடைக்கவில்லை. அதேபோல், கோட் மூன்றாவது படலில் விஜய்யின் டீ-ஏஜிங் லுக்கும் மோசமாக இருந்தது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். இதனால் விஜய் ரசிகர்களை கூல் செய்யும் விதமாக தற்போது அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி கோட் மூவி ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் வெளியாகவுள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறித்துள்ளது. 

முக்கியமாக இந்த அறிவிப்புடன் விஜய்யின் தரமான போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. கிரே கலர் டோனில் உருவாகியுள்ள இந்த போஸ்டரில், விஜய்யின் லுக் செம கிளாஸியாக உள்ளது. சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைல், தாடியுடன் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்துள்ளார் விஜய். அதன் பின்னணியில் அந்தரத்தில் பறந்தபடி விஜய் ஒரு கையிறை பிடிக்க முயற்சிக்கும் ஸ்டில்லும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதான் தனது ஃபேவரைட் போஸ்டர் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க - ஆகஸ்ட் 9 ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் லிஸ்ட்

எதிர்பாராத நேரத்தில் கோட் படத்தின் அப்டேட்டை வெளியிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது படக்குழு. அதேபோல், இப்படத்தின் இந்தி ரைட்ஸ் உரிமையை ஜீ ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற வாய்ப்பில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, பாதுகாப்பு காரணங்களுக்காக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், லியோ ரிலீஸுக்குப் பின்னர் படத்தின் சக்சஸ் மீட் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

அதேபோல், கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டு, சக்சஸ் மீட் கொண்டாட பிளான் செய்துள்ளாராம் விஜய். ஆடியோ லான்ச் இல்லையென்றாலும் சக்சஸ் மீட் கண்டிப்பாக நடைபெறும் என்றே சொல்லப்படுகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.