Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 24 - அதிர்ஷ்ட காற்று யார் பக்கம் வீசும்?

Today Horoscope Predictions in Tamil: சனி பகவானின் அருள் நிறைந்த சனிக்கிழமையான இன்றைய தினம் சந்திரன் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 24, 2024 - 05:00
Aug 24, 2024 - 17:57
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 24 - அதிர்ஷ்ட காற்று யார் பக்கம் வீசும்?
Today Rasi Palan 2024

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 08ஆம் நாள் ஆகஸ்ட் 24ஆம் தேதி சனிக்கிழமை பஞ்சமி திதி காலை 07.52 மணி வரை அதன் பின் சஷ்டி திதி. அசுவினி நட்சத்திரம் மாலை 06.05 மணி வரை அதன் பின் பரணி நட்சத்திரம். சந்திரன் பயணத்தால் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். உங்க ராசியில் உள்ள செவ்வாயுடன் சந்திரன் இணைகிறார் சந்திரமங்கல யோகம் கூடி வந்துள்ளது. இன்றைக்கு மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்க பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். ஆன்மீக பயணங்கள் மன அமைதியை தரும். குல தெய்வ வழிபாடு குதூகலத்தை கொடுக்கும். 

ரிஷபம்

சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.  பணவரவு வந்தாலும் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும்.  நண்பர்களால் உதவி கிடைக்கும். கடன் பிரச்சினை ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வருவதில் தடை ஏற்படலாம் முதலீடுகளை தவிர்க்கவும்.

மிதுனம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தை வெற்றி பெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.  சமூகத்தில் மதிப்பு மரியாதை மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பேச்சில் விட்டுக்கொடுத்து போங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும். 

கடகம்

சந்திரன் இன்றைய தினம்  உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல தகவல் தேடி வரும். வராது என நினைத்திருந்த கடன்கள் வசூலாகும். வெளியிலிருந்து வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும்.  உற்சாகமான நாளாக அமையும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.


சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணவருமானம் அதிகரிக்கும். வண்டி வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க உழைப்பை முதலீடு செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். 

கன்னி

சந்திரன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனமாக இருக்கவும். வீட்டில் சில சங்கடமான சம்பவங்கள் நடைபெறும் என்பதால் மன உளைச்சல் அதிகமாகும். இன்றைக்கு தேவையில்லாத டென்சன் வரும் என்பதால் புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இன்றைக்கு மவுன விரதம் இருப்பது ரொம்ப நல்லது.

துலாம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரனின் பார்வை உங்களுடைய ராசிக்கு நேரடியாக கிடைக்கிறது. உங்களுக்கு பணவருமானம் நன்றாக இருக்கும். உங்களைத் தேடி வரும் நல்ல செய்தியால் மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். 

விருச்சிகம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் திடீர் மருத்துவ செலவுகள் வரலாம்.  சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். இன்று உற்சாகமான நாள். பணத்தை சிக்கனமாக செலவு செய்து எதிர்காலத்திற்கு சேமியுங்கள்.

தனுசு

சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகமும் நன்றாக இருக்கும்.  குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவருமானம் நன்றாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் பல புதிய மாற்றங்களை செய்வீர்கள்.  இன்றைய தினம் ரொமான்டிக்கான நாளாக அமையப்போகிறது.

மகரம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனமாக பேசுங்கள் இல்லாவிட்டால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.  அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். எந்த பிரச்சினைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள்.

கும்பம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பம் குதூகலமாக இருக்கும். காதல் வாழ்க்கை களைகட்டும். நீண்ட நாட்கள் கழித்து நண்பர்களுடன் ஏற்படும் சந்திப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.


மீனம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவருமானம் அதிகரிக்கும்.  வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow