Sankatahara Chaturthi Viratham : மஹசங்கடஹர சதுர்த்தி விரதம்.. கேது தோஷம்.. சந்திர தோஷம் போக்கும் விநாயகர் விரதம்

Maha Sankatahara Chaturthi Viratham Benefits In Tamil : சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சமும். தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்த ஆண்டு வியாழக்கிழமையன்று மகாசங்கடஹர சதுர்த்தி விரத நாள் வருவது சிறப்பு.

Aug 12, 2024 - 06:30
Aug 13, 2024 - 09:39
 0
Sankatahara Chaturthi Viratham : மஹசங்கடஹர சதுர்த்தி விரதம்.. கேது தோஷம்.. சந்திர தோஷம் போக்கும் விநாயகர் விரதம்
Maha Sankatahara Chaturthi Viratham Benefits In Tamil

Maha Sankatahara Chaturthi Viratham Benefits In Tamil : விநாயகப்பெருமானுக்கு உகந்த மகா சங்கடஹர சதுர்த்தி விரதம் வரும் வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 22) கடைபிடிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தி மஹாசங்கடஹர சதுர்த்தி தினமாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுப காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் பெருகும் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை. 

மகா சங்கடஹர சதுர்த்தி:

சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது அழிப்பது என்று பொருள். சங்கட ஹர சதுர்த்தி விரதம்(Sankatahara Chaturthi Viratham) இருந்தால் சங்கடங்கள் நீங்கும்.  கேது தோஷத்தையும் சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர் விநாயகர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். 

சந்திர தோஷம்:

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான். சந்திரன்  மனோகாரகன். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கும் காரகன் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுப பலன்களையும், தேய்பிறை சந்திரன் பாதக பலன்களையும் தருகிறது. சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கவும், கேது தோஷம் போகவும் விநாயகரை வழிபடலாம். 

சந்திரதசையால் பாதிப்பு 

சந்திரதசை காலத்தில் ஒருவருக்கு சாதக பாதகங்களைத் தரும். ஒருவருக்கு சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். இந்த 10 பத்து வருட காலங்களில் 12 லக்னங்களுக்கும் சந்திரன் நன்மையும் தீமையும் கலந்த பலன்களைத் தருவார். சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் கேதுவால் ஏற்படும் தோஷங்களும் நீங்கவும் சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருப்பது நன்மை தரும். விநாயகர் தரிசனம், விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது, விநாயகருக்கு அபிஷேகத்திற்க்கு பால் வாங்கி கொடுப்பது போன்றவை சிறந்த வழிகளாகும்.

தோஷம் போக்கும் விநாயகர்

விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர் விநாயகர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக(Sankatahara Chaturthi) வழிபடுகிறோம்.

மகா சங்கடஹர சதுர்த்தி

ஓவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி(Sankatahara Chaturthi) ஆகும். அதாவது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் மஹா சங்கட ஹர சதுர்த்தி நாளிலிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும். ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிப்பது நல்லது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow