CID Sakunthala : மிடுக்கு.. துடிப்பான நடிப்பு.. பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் - திரையுலகினர் இரங்கல்

Veteran Tamil Actress CID Sakunthala Passes Away : உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். தமிழ் திரை உலகில் நாடகங்களில் இருந்து வந்து புகழ் பெற்ற நடிகர்கள் காலத்தால் அழியாத தனி இடத்தை பெற்று இருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் சகுந்தலா.

Sep 18, 2024 - 09:55
Sep 18, 2024 - 11:02
 0
CID Sakunthala : மிடுக்கு.. துடிப்பான நடிப்பு.. பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் - திரையுலகினர் இரங்கல்
cid sakunthala passes away

Veteran Tamil Actress CID Sakunthala Passes Away : பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா உடல் நலக்குறைவினால் காலமானார். அவருக்கு வயது 84.சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா(CID Sakunthala) சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமானதால், அதன் பிறகு ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். 

வில்லனாக அறிமுகமாகி நாயகனாக உயரும் நடிகர்களைப் போல, ஒரு நடன கலைஞராக அறிமுகமாகி, அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து கதாநாயகியாக உயர்ந்தவர் சிஐடி சகுந்தலா. சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெய்சங்கர் போன்ற முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜி கணேசனுடன் நடித்த தில்லானா மோகனாம்பாள், பாரதவிலாஸ், வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்கள் காலத்தால் அழியாதவை.

‘படிக்காத மேதை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’ என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார்.

தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா(CID Sakunthala).சினிமாவிலிருந்து விலகிய பிறகு சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow