2025 ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கடந்த மாதம் மார்ச் 22 ஆம் தேதி 10 அணிகளுடன் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றையப்போட்டியில், கொல்கத்தா மற்றும் ஐதரபாத் அணிகள் மோதுகின்றனர். இன்று இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ்
நடப்பு தொடரில், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைர்ரைடர்ஸ் அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளில் இரண்டில் தோல்வியை தழுவியுள்ளது. 18 வது சீசனில் முதல் போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி அபாரமாக விளையாடி 20 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை குவித்து ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து லக்னோ அணியுடனான போடியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இன்று டெல்லி அணியுடனான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது
ஐபிஎல் தொடரின் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை எதிரணிக்கு நிர்ணயித்த முதல் அணியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. எதிர் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சன்ரைசர்ஸ் அணி, இந்த தொடரில் கடைசி 2 போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. கடந்த சீசன் முதல் ஐபிஎல் வரலாற்றில் இமாலய ரன்களை சன்ரைசர்ஸ் ஐதரபாத் குவித்து வருகிறது. இதுவரை நடந்த 18 சீசன்களிலும், அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி மற்றும் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் நிகழ்த்தியுள்ளது.
புள்ளிப்பட்டியல்
நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி 3 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால், புள்ளிப்பட்டியலில், கடைசி இடமான 10-வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 போட்டிகளில் 1 வெற்றியுடன் ரன்ரேட் அடிப்பைடையில் 8-வது இடத்தில் உள்ளது.
தீவிர பயிற்சி
இரண்டு அணிகளும் தங்களது 2-வது வெற்றிக்காக போராடி வரும் நிலையில், இன்றையப்போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், 28 போட்டிகளில், ஐதராபாத் அணி 9 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2025
IPL2025: 2 வெற்றியை பெறப்போவது யார்? சன்ரைசர்ஸ் கொல்கத்தா இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதுகின்றன.