நேற்றைய மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்தில் ஒன்றை உறுதி செய்தது. இதன் மூலம் நேரடியாக குவாலிஃபையர் 1 போட்டியில் விளையாட உள்ளது பஞ்சாப் அணி. ஒருவேளை குவாலிஃபையர் 1 போட்டியில் தோற்கும் பட்சத்தில் இறுதி போட்டிக்கு செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு பஞ்சாப் அணிக்கு கிடைக்கும் என்பதால் பஞ்சாப் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அப்படியே இந்த பக்கம் திரும்பினால், மும்பை ரசிகர்கள் கண் கசங்கி கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஏங்க இவ்வளவு கவலை? அதான், எப்படியும் ப்ளே-ஆப் சுற்றுக்குள் போய்டீங்கள என்றால்.. அந்த துயரத்தை ஏன் கேட்குறீங்க என திரும்பவும் விசும்பத் தொடங்குகின்றனர். காரணம் மும்பை இந்தியன்ஸ் ட்ராக் ரெக்கார்ட் அப்படி. 5 முறை சாம்பியன், சரியான கடப்பாரை டீம், எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனம் அப்படி என்ன தான் பில்டப் ஏத்துனாலும், எலிமினேட்டர் போட்டிகளில் மும்பை விளையாடி கோப்பையினை வென்றதாக சரித்திரம் இல்லை.
5-வது முறையாக எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி:
நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் ஐபிஎல் தொடரில் 5 வது முறையாக எலிமினேட்டர் போட்டிகளில் விளையாட உள்ளது மும்பை அணி. இதற்கு முன்னதாக, 2011, 2012, 2014, 2023 ஆகிய ஆண்டுகளில் எலிமினேட்டர் போட்டிகளில் மும்பை விளையாடியுள்ளது. அதில் 2 முறை வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்து நடைப்பெறும் குவாலிஃபையர் 2-ல் தோற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது மும்பை அணி. வரலாற்றை கொஞ்சம் கிளறி பார்ப்போம்.
2011 எலிமினேட்டர்: மும்பையில் நடைப்பெற்ற இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் வென்ற பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபையர் 2 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
2012 எலிமினேட்டர்: 2012 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக எலிமினேட்டர் ரவுண்டில் நடையை கட்டியதால் மும்பை ரசிகர்கள் கடும் அப்செட் ஆனார்கள்.
2014 எலிமினேட்டர்: பிராபோர்னில் நடந்த இந்தப் போட்டியில் மீண்டும் ஒருமுறை எலிமினேட்டர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
2023 எலிமினேட்டர்: கடைசியாக, 2023 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்த தடவை மிஸ் ஆகாது, எப்படியும் கோப்பையினை வென்று விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ந்து 4 முறை எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்துள்ளதால், இந்த ஆண்டு மீண்டும் எலிமினேட்டரா? என முகம் வாடி போயுள்ளனர் மும்பை ரசிகர்கள். ரோகித் ஏற்கெனவே டி20,டெஸ்ட் தொடர்களில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். நடப்பு சீசனிலும் கெஸ்ட் ப்ளேயர் போல் இம்பெக்ட் ரோலில் பேட்டிங் மட்டுமே பெரும்பாலும் செய்து வருகிறார். ரோகித்துக்காக இந்த ஆண்டு மும்பை கோப்பை வெல்லும் என கனவோடு இருந்த மும்பை ரசிகர்களின் எண்ணோட்டத்தில் மண் விழுந்துள்ளது.
இன்று பெங்களூரு- லக்னோ அணிகளுக்கு இடையேயான இறுதி லீக் போட்டி நடைப்பெறுகிறது. இதில் பெங்களூரு அணி தோற்கும் பட்சத்தில், மும்பையுடன் எலிமினேட்டர் போட்டியை எதிர்கொள்ளும். ஒருவேளை வெற்றி பெற்றால், குஜராத் அணி மும்பை அணியே எலிமினேட்டரில் எதிர்கொள்ளும். வருகிற மே 30, சண்டிகர் முல்லன்பூரில் எலிமினேட்டர் போட்டி நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.