K U M U D A M   N E W S

Author : Vasuki

மேக்ஸ்வெல்லுடன் தொடர்புபடுத்தி பேசிய ரசிகர் - கடுப்பான ப்ரீத்தி ஜிந்தா

சமூக வலைதளத்தில் பஞ்சாப் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெலுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய ரசிகருக்கு நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரித்தி ஜிந்தா கோபமாக பதிலளித்துள்ளார்.

துணைவேந்தர்கள் நியமனம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 22-ல் வெளியாகிறது 'Heart Beat Season 2' வெப் சீரிஸ்!

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ஹார்ட் பீட் வெப்சீரிஸ் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, 2-ம் பாகம் வரும் மே22 ஆம் தேதி வெளியாகிறது.

என் திரைப்படத்திற்கு எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை - இயக்குநர் நெகிழ்ச்சி!

என் குடுபத்தோடு திரைப்படம் பார்க்க எண்ணி டிக்கெட் தேடிய போது என் படத்திற்கு போக எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை என்று டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பான் இந்தியா ஸ்டார் ஆனார் ரெஜினா கசாண்ட்ரா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரெஜினா கசாண்ட்ரா பான் நடிகையாக வலம் வருகிறார்.

வெறும் 36 நாட்கள்.. முதல் பெண் தலைமை நீதிபதியாகும் பி.வி.நாகரத்னா?

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2027-ல் பதவியேற்கும் முதல் பெண் தலைமை நீதிபதி பி.வி.நாகரத்னா சுதந்திர இந்தியாவில், முதன் பெண் நீதிபதியாக பதவியேற்று அவர் வெறும் 36 நாட்கள் மட்டுமே பதவிவகிப்பார் என்ற நிலையில், பெண்கள் நீதிபதியாவதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆகிறது என்று கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

Pollachi case : பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக-வின் பங்கு என்னவென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு.. யார் இந்த பி.ஆர்.கவாய்?

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையில் உறங்கும் நபர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது!

சென்னையில் சாலையில் படுத்து உறங்கும் நபர்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

பொய் கூறுவதையே எடப்பாடி பழனிசாமி வேலையாக வைத்துள்ளார் - முதலமைச்சர் விமர்சனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறுவதையே வேலையாக கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

IPL2025: மாற்றியமைக்கப்பட்ட ஐபிஎல் 2025 போட்டி அட்டவணை.. மே-17-ல் தொடக்கம்!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள போட்டிகள் மே 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 34 மருத்துவக் கல்லூரிகளுக்கு NMC நோட்டீஸ்!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு குறித்து உரிய விளக்கம் அளிக்க 34 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பாகிஸ்தானுக்கு முப்படைகளும் தக்க பாடத்தை புகட்டியுள்ளது - மோடி

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

S-400 முன்பு பிரதமர் மோடி உரை.. விமானப்படை வீரர்களுக்கு பாராட்டு!

பாகிஸ்தானை தாக்கி அழித்ததாக கூறிய வான் பாதுகாப்பு அமைப்பான S-400 முன்பு நின்று பிரதமர் மோடி நிகழ்த்திய உரையினால், S-400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் பரப்பிய பொய்கள் உடைக்கப்பட்டுள்ளது.

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' மிகவும் ஸ்பெஷலாக இருக்கும் - நடிகர் சந்தானம்

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

சிறப்பு கல்வி உதவி தொகை இல்லை.. படிப்பை தொடர முடியாத நிலை.. நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

சிறப்பு கல்வி உதவி தொகை, அரசு உதவித்தொகை, படிப்பை தொடர முடியாத நிலை, சென்னை, நீதிமன்றம், பொதுநலவழக்கு, பட்டியலின பழங்குடியின மாணவர்கள், Special education scholarship, government scholarship, inability to continue studies, Chennai, court, public interest litigation, Scheduled Tribe students

ரவுடி நாகேந்திரனின் சகோதரருக்கு மருத்துவ சிகிச்சை.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனின் சகோதரர் முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா..சர்க்கரை தீபம் ஏந்தி பக்தர்கள் சாமி தரிசனம்!

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பாக வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Pollachi Case: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

Pollachi Judgement: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விவரம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

ஐசரி கே கணேஷ் வீட்டு திருமணத்தில் 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு!

ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு என 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி ஐசரி கே கணேஷ் அசத்தியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஜிவி பிரகாஷுன் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

IPL2025: மீண்டும் தொடங்கப்படும் ஐபிஎல் போட்டிகள்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தால் நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போடு, மே 15 ஆம் தேதிக்கு பிறகு போட்டி தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியாகியுள்ளது.

சித்ரா பௌர்ணமி: 5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.