பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ' டூரிஸ்ட் ஃபேமிலி '. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இயக்குநர் அபிஷன் ஜீவிந் பேசியதாவது, முந்தைய நிகழ்வினில்., என் குழு அனைவருக்கும் நன்றி சொன்னேன். இப்போது பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். உங்கள் பாரட்டில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வந்துள்ளார்கள். என் ஃபேமிலியோடு படத்திற்கு போக எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை, இப்படத்தை வெற்றிப்படமாக்கி தந்த யுவராஜ் அண்ணா மகேஷ் அண்ணாவிற்கு நன்றி. சசி அண்ணா இந்தப்படத்தில் வருவது போல தான், உங்களுக்கே தெரியாது, நீங்கள் எனக்கு எவ்வளவு செய்துள்ளீர்கள் என்று, எல்லாவற்றிக்கும் நன்றி. சிம்ரன் மேம் உங்களுடன் வேலை பார்த்தது கனவு மாதிரி உள்ளது, இந்த வாய்ப்பைத் தந்ததுக்கு நன்றி. ஷான் ரோல்டன் அண்ணா எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி. என் குழு அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் பேசியாதவது, இது ஒரு நன்றி சொல்லும் விழா. எங்களுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தந்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. எப்போதும் நல்ல கதைகளை ஜெயிக்க வைக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் அபிக்கு வாழ்த்துக்கள். என் தம்பி ஜெயித்தது போல் உள்ளது. சசி சார் தம்பி எனக்குப் பழக்கம், அவர் வீட்டுக்குப் போய் போட்டோ எடுத்து வந்துள்ளேன் ஆனால் அவரை வைத்து படமெடுப்பேன் என நினைக்கவில்லை. அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் நன்றி.
நடிகை சிம்ரன் பேசியதாவது, எல்லோருக்கும் நன்றி. அபி கதை சொன்ன போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்றேன். அப்போதே மகேஷை மீட் செய்து இந்தப்படம் செய்கிறேன் என்று சொன்னேன். நான் பல வருடங்களாக இந்த துறையில் உள்ளேன். நீங்கள் தரும் ஆதரவு தான் இந்த வெற்றிக்கு காரணம், உங்களுக்கு நன்றி. சசிகுமார் சார் மிக அற்புதமான மனிதர். அற்புதமான இயக்குநர் அற்புதமான கோ ஸ்டார். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 20 வருடம் கழித்து மீண்டும் என்னை உருவாக்கியுள்ளார்கள். என் குழு அனைவருக்கும் நன்றி.
நடிகர் சசிகுமார் பேசியதாவது, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் தந்த வெற்றி தான் இது. நீங்கள் சம்பளத்தை ஏத்தி விடுவீர்களா எனக் கேட்டீர்கள், கண்டிப்பாக ஏத்த மாட்டேன், இந்தப்படத்தை இந்த பட்ஜெட்டில் தான் எடுக்க வேண்டும், அப்போது தான் அது வெற்றி பெறும். இந்தப்படம் நிறையப்பேரின் கனவை நனவாக்கியுள்ளது, நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது. ஒரே மாதிரி படம் பண்ண வேணாம் டிஃபரண்ட் டிஃபரண்டா படம் பண்ணலாம், வேறு மாதிரி ஜானர் படம் பண்ணலாம் அப்படின்ற ஒரு நம்பிக்கையை, இந்த படம் கொடுத்திருக்கதான் நான் நினைக்கிறேன். ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்துகிட்டே இருக்காங்க. எனக்கு பல ஆண்டுகளுக்கு அப்புறம் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இது என்னோட வெற்றியா நான் நினைக்கவில்லை. இந்த படம் வெற்றிய வந்து ஒரு சசிகுமார் ஜெயிச்சுட்டான். ஒரு மில்லியன் டாலர் ஜெயிச்சிருச்சு அப்படின்னு நினைக்காதீங்க. புது தலைமுறை ஜெயித்துள்ளது. தோல்வி அடைஞ்ச இயக்குனர்களுக்கு இப்படம் நம்பிக்கை கொடுத்திருக்கிறது என்று கூறினார்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது, இப்படத்தை வெற்றிப்படமாக்கிய பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இந்தப்படத்தை ஒப்புக்கொண்ட சசி சாருக்கு நன்றி. நீங்கள் செய்த நல்லது தான் இந்த வெற்றிக்கு காரணம். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.
கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.