K U M U D A M   N E W S

Author : Vasuki

நில அபகரிப்பு வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்!

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு போலீசார், பினாமி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

பா.ம.க. சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு- ஏற்பாடுகள் தீவிரம்!

மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாமக சித்திரை முழு நிலவு மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இம்மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இணைந்து பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

13வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. சிறுமியின் தாய் உட்பட 13 பேர் கைது!

பல்லாவரம் அருகே 13-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் மற்றும் சிறுமியின் தாய் உட்பட 13 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

உதகையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தொடக்கம்!

உதகையில் தேசிய அளவிலான 136-வது மற்றும் 137 - வது நாய்கள் கண்காட்சி துவங்கியது. ஜெர்மன் ஷெபர்ட், லேப்ரடார், சைபீரியன் ஹச்கி, பீகில் மற்றும் உள்நாட்டு ரகங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிபாரை உள்ளிட்ட 55 வகைகளில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.

ஆப்ரேஷன் சிந்தூர்: கடும் சரிவில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திரும்பிய அமைதி - இயல்பு நிலையில் மக்கள்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று இரவு முதல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால், அமைதி திரும்பியுள்ளது. நேற்று (மே.10) இரவு 10.30 மணிக்குப் பிறகு தாக்குதல் நடைபெறவில்லை என பாதுகாப்புப்படை தகவல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி தரப்படும் - விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை

பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை - வானதி சீனிவாசன்

இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

"பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்" - இந்திய இராணுவம்

போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்.. உதகையில் களைக்கட்டும் ரோஜா கண்காட்சி..!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை தமிழக  அரசு தலைமை கொறடா க.ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் எதிரொலி: தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் செய்திகள் போல போலி இணைப்புகள் மற்றும் APK கோப்புகள் குறித்து கவனமாக இருக்கும்படி தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் - தமிழக அரசுக்கு நடிகர் சௌந்தரராஜா வேண்டுகோள்

நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும் என்றும், நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் சௌந்தரராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டி - ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ள கோலி!

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவை பரிசீலிக்குமாறு விராட் கோலியிடம் பிசிஐ அறிவுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

S-400 செயலிழந்ததாக பரவும் தகவலுக்கு பாதுகாப்பு துறை மறுப்பு!

இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் S-400 ' சேதமடைந்துள்ளதாகவும், செயலிழந்துள்ளதாகவும் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு.. மலை ரயில் போக்குவரத்து ரத்து!

மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ரெயில் பாதையில் விழுந்த ராட்சச பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இரண்டாவது நாளாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தாக்கிய இந்தியா!

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கையெறி குண்டுகளுடன் டிரோன்கள்..தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..!

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

India vs Pakistan : அத்துமீறும் பாகிஸ்தான்.. அடித்து விரட்டும் இந்தியா.. கோவையில் பாதுகாப்பு பணி தீவிரம்!

India vs Pakistan War Update : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரித்து காணப்படும் சூழலில், சி.ஐ.எஸ்.எஃப். மற்றும் தமிழ்நாடு காவல் பிரிவு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Cannes Film Festival 2025: கேன்ஸ் திரைப்பட விழா... அதிகார பூர்வ போட்டியில் இடம்பிடித்த தமிழ்த்திரைப்படம்!

Cannes Film Festival 2025 : “மாண்புமிகு பறை” திரைப்படம் கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகார பூர்வ போட்டியில் பங்கேற்று ஜூரி மெம்பர்ஸால் படம் பார்க்கப்பெற்றது.

IPL 2025 Match Suspended: இந்தியா,பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ரத்து?

IPL 2025 Match Suspended Due To India Pakistan War: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மீது பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல்.. முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

India vs Pakistan War Update : ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல் நடத்திய நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

India Pakistan War : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி: நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

India Pakistan War Update in Tamil: இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வானார் புதிய போப் லியோ XIV... முதன்முறையாக அமெரிக்காவை சேர்ந்த தேர்வு!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதான இவர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார்.

India Pakistan War : இந்தியா, பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட முடியாது - அமெரிக்க துணை அதிபர்

India Pakistan War Update : இந்தியாவில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வரும் சூழலில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.