இந்தியா - பாக். போர் பதற்றம்

ஆப்ரேஷன் சிந்தூர்: கடும் சரிவில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர்: கடும் சரிவில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!
ஆப்ரேஷன் சிந்தூர்: கடும் சரிவில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்
இந்தியா மேற்கொண்ட 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால், கடந்த 3 நாட்களாக பதற்றமான சூழல் காணப்பட்டது. இதன் தாக்கம் இருநாட்டின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தன. அதன்படி, பாகிஸ்தான் பங்குச் சந்தை முதல் 2 நாட்களாக சரிவடைந்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை லேசான எழுச்சி கண்டது.

பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான கே.எஸ்.இ., 799 புள்ளிகள் உயர்ந்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 326 புள்ளிகளில் நின்றது. இருந்தபோதிலும் கடந்த 3 நாட்களில் பாகிஸ்தான் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளனர். இதையொட்டி சரிவை சமாளிக்க பாகிஸ்தான், தனது நட்பு நாடுகளிடம் கடன் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக கடந்த 3 நாட்களாக நடந்து வந்த இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துதது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பயங்கரவாதிகளின் 9 நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதல், நடந்த இத்தாக்குதலுக்கு எதிராக, பாகிஸ்தானும் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவான நிலையில், சண்டையை நிறுத்தும்படி அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு வெளியான நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று இரவு முதல் சண்டை தாக்குதல் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இருநாட்டு பிரச்னைகளும் தீர்ந்த பின்னர், பங்குச்சந்தையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.