இந்தியா - பாக். போர் பதற்றம்

S-400 முன்பு பிரதமர் மோடி உரை.. விமானப்படை வீரர்களுக்கு பாராட்டு!

பாகிஸ்தானை தாக்கி அழித்ததாக கூறிய வான் பாதுகாப்பு அமைப்பான S-400 முன்பு நின்று பிரதமர் மோடி நிகழ்த்திய உரையினால், S-400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் பரப்பிய பொய்கள் உடைக்கப்பட்டுள்ளது.

S-400 முன்பு பிரதமர் மோடி உரை.. விமானப்படை வீரர்களுக்கு பாராட்டு!
S-400 முன்பு பிரதமர் மோடி உரை.. விமானப்படை வீரர்களுக்கு பாராட்டு!
பாரத அன்னை வாழ்க என்பதே இந்தியாவின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது. இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் புதிய வரலாற்றை உருவாக்குகின்றனர். விமானப்படை வீரர்கள் நமது நாட்டை பெருமையடைய செய்துள்ளனர். இந்திய மக்கள் அனைவரும் ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அழித்தோம். நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் அழிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் இன்று ஒவ்விரு மூலையிலும் ஆபரேஷன் சிந்தூர் ஒலிக்கிறது. இந்த ஆபரேஷனின்போது, ஒவ்வொரு இந்தியரும் உங்களுடன் துணை நின்றனர். ஆபரேஷன் சிந்தூர் ஒரு சாதாரண இராணுவ ஆபரேஷன் அல்ல. இது இந்தியாவின் கொள்கை என்று கூறினார்.

ஆதம்பூர் விமான நிலையத்தை அழிக்கும் பாகிஸ்தானின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தோம். பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் பாதுகாப்பான இடமில்லை என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோம். முப்படைகளும் இணைந்து, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளை அழித்தது.

இனி பயங்கரவாதிகளை அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அழிப்போம். பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் கேடயமாக பயன்படுத்தியது. 20 முதல் 25 நிமிடங்களுக்குள் பயங்கரவாதிகளின் 9 இடங்களை குறிவைத்து தாக்கி அழித்தோம் என்று பெருமையா பிரதமர் மோடி கூறினார்.

ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும், பாகிஸ்தானுக்கு புதிய லட்சுமண ரேகையை உருவாக்கியுள்ளோம். இந்திய ட்ரோன்கள் பாகிஸ்தானை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, "நமது நாட்டின் பெண்கள் நெற்றியில் இருந்து குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளை அவர்கள் வீட்டிலேயே நசுக்கியழித்தோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

அணு ஆயுதங்களை கண்டு அஞ்சமாட்டோம் என்று கூறிய பிரதமர், நமது நாட்டிற்காக நமது ஆயுதப் படைகள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.