பயங்கரவாதிகள் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதை அனைத்தையும் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம், பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள ராணுவ கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்
கடந்த 3 நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்தும் வரும் பரஸ்பர தாக்குதல் நடந்து வந்தது. இதனால் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் திணறி வந்தது. மேலும் ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, தொடர்வதாக இந்திய ராணுவ அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.
ஆப்ரேஷன் சிந்தூரால் அலறிப்போன பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பான பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது தான் சற்று சகஜ நிலைக்கு வரும் போது தேவையில்லாமல் இந்தியாவுடன் மோதுவதாக அந்நாட்டு எம்.பி ஒருவர் தெரிவித்திருந்ததாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் இனிமேல் இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அது போராக கருதப்படும் என இந்தியா சார்பில் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல்
இந்த நிலையில், இந்தியாவும் – பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில, “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
மீண்டும் பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து, சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், மாலை 5 மணி முதல் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் மத்திய அரசு தரப்பில், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். வரும் 12ம் தேதி பிற்பகலில் மீண்டும் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.