இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடத்தப்படுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
உதைகைக்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டு தோறும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த மூன்றாம் தேதி காய்கறி கண்காட்சியுடன் துவங்கியது.
இந்நிலையில் உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கியுள்ளது. இந்த ரோஜா கண்காட்சியினை தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
2 லட்சம் ரோஜாக்களில் மலர் அலங்காரங்களாய் கடல்வாழ் உயிரினங்களின் வடிவமைப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் ரோஜா கண்காட்சிக்காக நூற்றாண்டு ரோஜா பூங்காவில் சிகப்பு, வெள்ளை, மஞ்சள், ஊதா, ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
ரோஜா கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடல் சார்ந்த உயிரினங்களின் உருவங்கள் ரோஜா மலர்களால் வடிவமைத்துள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டு பூங்காவில் ‘கடல்வாழ் உயிரிணங்களை மையமாகக் கொண்டு மலர்களால் அமைக்கப்பட்டுள்ள மலர்சிற்பங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உள்ளது
24 அடி உயரத்தில் 80 ஆயிரம் சிகப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களை கொண்டு பிரம்மாண்டமான டால்பின், முத்து, சிப்பி, நத்தை, ,மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன் போன்ற பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள், வண்ண, வண்ண ரோஜா மலர்களை கொண்டு துல்லியமாக வடிவமைத்துள்ளனர்.
பூங்காவுக்குள் நுழையும் நொடியில் சுற்றுலாப் பயணிகள் “கடல் உலகத்திற்கே வந்துவிட்டோமோ? எனும் உணர்வில் ஆழ்த்தி உள்ளது. பல வண்ணங்களில் 2 லட்சம் ரோஜாக்களை கொண்டு மலர் அலங்காரங்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் முன்பு நின்று, உள்ளூர் மக்கள் மற்றும் இன்றி சமநிலைப் பிரதேசங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும், இன்று தொடங்கிய இந்த ரோஜா கண்காட்சி இன்று மற்றும் நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.