சர்வதேசச் சந்தையில் நிலவும் போர்ப்பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால், சென்னையில் தங்கம் விலை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்ற சர்வதேசக் காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகமாக இருக்கும் தங்கம் விலை, இன்றும் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று நாட்களில் கிடுகிடு உயர்வு
கடந்த திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,480-க்கு விற்கப்பட்ட நிலையில், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விலை கணிசமாக உயர்ந்தது. இன்று மூன்றாவது நாளாக உயர்ந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.14,360-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு சுமார் ரூ.2,400 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், வெள்ளி விலை இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் மீது திரும்புவதே இந்தத் தொடர் விலையேற்றத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7