இந்தியா

தேர்வானார் புதிய போப் லியோ XIV... முதன்முறையாக அமெரிக்காவை சேர்ந்த தேர்வு!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதான இவர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார்.

தேர்வானார் புதிய போப் லியோ XIV... முதன்முறையாக அமெரிக்காவை சேர்ந்த தேர்வு!
தேர்வானார் புதிய போப் லியோ XIV
கத்தோலிக்க திருச்சபையின் 266 வது தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் ஏப்ரல் 21 ஆம் தேதி வாடிகனில், உடல் நடலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு உலகம் முழுவதிலும் உள்ள கர்டினல்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி அவரது உடல் ஏப்ரல் 26-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.

புதிய போப்பை தேர்ந்தெடுக்க 71 நாடுகளை சேர்ந்த 133 கார்டினல்களும், ரோம் நகரில் உள்ள வாடிக​னின் சிஸ்​டைன் தேவால​யத்​தின் கான்க்ளேவ் மாநாட்டில் பங்கேற்றனர். இதில் முதல் நாள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாததால், தேவாலயத்தில் இருண்டு கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து 2-வது நாள் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில் புதிய போப் தேர்வு செய்யப்பட்டதைக் குறிக்கும் விதமாக புகைப் போக்கி வழியாக வெண்புகை வெளியிடப்பட்டது. மேலும், புனித பீட்​டர் தேவாலயத்தின் பெரிய மணி​கள் ஒலித்​தன.



கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரோவேஸ்ட் வயது (69) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த இவர், பெருவில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் வாடிகனின் 267 போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.