தமிழ்நாடு

13வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. சிறுமியின் தாய் உட்பட 13 பேர் கைது!

பல்லாவரம் அருகே 13-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் மற்றும் சிறுமியின் தாய் உட்பட 13 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

13வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. சிறுமியின் தாய் உட்பட 13 பேர் கைது!
13வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. சிறுமியின் தாய் உட்பட 13 பேர் கைது!
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து 13 வயது சிறுமி கர்பமாக இருப்பதாக சங்கர் நகர் காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரனையில், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் பெற்றோருடன் வசித்து வரும் 13 வயது சிறுமி பல்லாவரத்தில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்,

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்,சிறுமியின் வீட்டிற்கு தண்ணீர் கேன் போடச் செல்வது போன்று சென்று, சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து பழகி வந்தான். ஒரு கட்டத்தில், சிறுமியை காதல் செய்வதாக ஆசை வார்த்தை கூறியதால், அதனை உண்மை என்று நம்பிய சிறுமியும் அந்த சிறுவனிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் சிறுமியின் தாய் உதவியுடன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, தனது நண்பர்கள் சிலரையும் சிறுமியிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவனது நண்பர்களும் அந்த சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி, கர்ப்பமடைந்துள்ளார்.

சிறுமியின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றநிலையில், அப்பொழுது மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்த மருத்துவர்கள், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஏழு சிறார்கள் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (19), சஞ்சய்(19), எஸ்.சஞ்சய்(18), முடிச்சூரை சேர்ந்த சூர்யா (22), ஈசா பல்லாவரத்தை சேர்ந்த நிக்சன் (22) மற்றும் 39 வயதான சிறுமியின் தாய் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த 13 பேரின் மீதும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, இளைஞர்களை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, சிறுவர்களை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.

மேலும் பாதிக்கபட்ட சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த கூட்டு பலத்கார சம்பவம் பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.