K U M U D A M   N E W S

Author : Vasuki

IPL 2025: மும்பை சொந்த மண்ணில் முதல் வெற்றி பெறுமா? கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்!

டி20 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பெறுவதற்கு போராடி வருகிறது. அதே போல் 3 முறை கோப்பைகளை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான கொல்கத்தா அணி, தங்களுடைய 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. 2 பலம் வாய்ந்த அணிகளும் மோதும் போட்டி என்பதால், இன்றையப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

RR vs CSK: தொடர் தோல்வியில் சிஎஸ்கே... முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்!

2025 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.

CSKvsRR :

2025 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.

செங்கோட்டையனுக்கு Y + பாதுகாப்பு - மத்திய அரசு பரிசீலனை !

செங்கோட்டையனுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார விடுமுறை எதிரொலி.. உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

உதகையில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க வார விடுமுறை நாளான இன்று அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

விஜய்க்கு படத்திற்கு பல மொழி வேண்டும், ஆனால், பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா? - தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

விஜய் போன்றவர்களுக்கு படத்திற்கு பல மொழி வேண்டும், ஆனால், பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா? என்று கேள்வி எழுப்பியுளார். முதலில் திமுக எதிர்ப்பை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டும் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். 

பெண் ஊழியரின் கைப்பை பறிப்பு.. அத்துமீறிய பேரூராட்சி தலைவர்

கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சியில் பெண் ஊழியர்களிடம் பேரூராட்சி தலைவர் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சிசிடிவி ஆதாரங்களுடன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் அளித்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில்,  இரவு நேரத்தில், வீட்டிற்கு புறப்பட்ட பெண் ஊழியரின் கைப்பையை வலுக்கட்டாயமாக தலைவர் பறித்து வைத்து கொண்டு அலக்கழிக்கும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சபரிமலையில் உயிரிழக்கும் பக்தர்களுக்கு இன்சூரன்ஸ்.. தேவசம்போர்டு அறிவிப்பு!

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கேரளாவில் எங்கு விபத்து ஏற்பட்டு இறந்தாலும் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. 

ஆய்வுக்கு வந்த அமைச்சரிடம் சமூக ஆர்வலர் வாக்குவாதம்!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் ஆய்வுக்கு வந்த அமைச்சர் பொன்முடியிடம், அங்கிருந்த சிலர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

IPL 2025: வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்? CSK vs RR இன்று பலப்பரீட்சை!

கவுகாத்தியில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன. 

DC vs SRH: ஐபிஎல் 10வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் இன்று மோதல்!

ஐபிஎல் 18 வது சீசனில் 10 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். இரண்டு அணிகளும் தங்களுடைய 2-வது வெற்றிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

IPL 2025: தொடர் தோல்வியில் மும்பை.. 36 ரன்கள் வித்தியாத்தில் குஜராத் அபார வெற்றி!

GT vs MI: ஐபிஎல் 2025 டி20 தொடரில் 9 லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைடன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 63 விளாசினார்.

இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்வு.. விசைத்தறி சங்கங்கள் அரசுக்கு நன்றி

இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர்  வரவேற்பு தெரிவித்த நிலையில், இதன் மூலம் 5 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை.. ஏராளமானோர் பங்கேற்பு!

மேலூரில் முத்துமாரியம்மன் கோவிலில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி நடைபெற்ற பூஜையில் திரளான பெண்கள் கலந்துக் கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

காவல்துறைக்கு எதிரான முன்னாள் அமைச்சரின் வழக்கு.. மனித உரிமை ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

IPL 2025: சேப்பாக்கம் மைதானத்தில் CSK வெற்றி தொடருமா? 17 வருடக்கனவு RCB-க்கு நிறைவேறுமா?

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் திருவிழா போல இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மைதாங்களில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 18 வது சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றனர். 

இந்தியாவிற்கு வருகை தரும் கால்பந்து அணி.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸி  தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு வருகைத்தர உள்ளது. கால்பந்து உலகின் மன்னன் லியோனல் மெஸ்ஸி 14 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு வருவது, அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீரக மோசடி வழக்கு.. மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு!

சிறுநீரக மோசடி மூலம் சட்டவிரோத பணப்பரிவர்தனையில் ஈடுபட்ட வழக்கில் மருத்துவர் வி.எம்.கணேசன் அவரின் மனைவி உள்ளிட்ட மூன்று பேருக்கு  எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CISF வீரர்கள் சைக்கிள் பேரணி.. வேதாரண்யத்தில் உற்சாக வரவேற்பு!

இந்திய நாட்டின் கடல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் சைக்கிள் பேரணி விழிப்புணர்வு இன்று வேதாரண்யம் வந்தடைந்த நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் மீதான நில அபகரிப்பு வழக்கு.. ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய  சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

த.வெ.க முதல் பொதுக்குழு கூட்டம்.. திமுக அரசை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக-வுக்காக வேலை செய்வதாக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம்  சாட்டியுள்ளார்.   

சிறார்கள் ஏற்படுத்தும் வாகன விபத்து  முதலிடத்தில் தமிழ்நாடு.. அதிர்ச்சித் தரும் iRAD ரிப்போர்ட்!

இந்தியளவில் சிறுவர்கள் அதிகம் விபத்தில் சிக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று வெளியாகி இருக்கும் புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அத்திப்பட்டு புதுநகர் - எண்ணூர் இடையே ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி!

அத்திப்பட்டு புதுநகர் - எண்ணூர் இடையே எஞ்சினுக்கு மின்சாரம் கடத்தும் கொக்கி வயரில் சிக்கியதால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை 1மணி நேரம் பாதிப்பட்டதால் ரயில் பயணிகள் அவதியடைந்தனர். 

தமிழில் குடமுழுக்கு நடத்த அரசாணை.. நா.த.க மனுவிற்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து, அரசாணை பிறப்பிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பேட்டரி வாகனங்கள் யூஸ் பண்ணுங்க.. இஸ்ரோ விஞ்ஞானி கொடுக்கும் அட்வைஸ்!

அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.