இந்தியா

இந்தியர்களின் கவனத்திற்கு.. விசா இல்லாமல் செல்லும் வெளிநாடுகள் தெரியுமா?

இந்தியர்கள் விசா இல்லாமல் எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதனை இப்பகுதியில் காணலாம்.

 இந்தியர்களின் கவனத்திற்கு.. விசா இல்லாமல் செல்லும் வெளிநாடுகள் தெரியுமா?
தரவரிசையில் மாற்றம்... விசா இல்லாமல் செல்லும் வெளிநாடுகள் தெரியுமா?
நம்மில் பலருக்கு உலக நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருக்கும். ஆனால், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தேவையான பாஸ்போர்ட், விசா போன்றவை இல்லை என்றால் ஆசை இருந்தாலும் அது என்றுமே நிறைவேறாது. ஆனால், தற்போது ஒருசில நாடுகளுக்கு பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும், விசா இல்லாமலும் கூட வெளிநாடுகளுக்கு சென்று சுற்றுப்பார்க்கலாம்.

உலக நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய நாடுகளில் இந்தோனேசியா, மொரீஷியஸ், மாலத்தீவுகள், இலங்கை போன்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வரலாம்.

ஐரோப்பா , அமெரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற இடங்களுக்குச் செல்ல இந்தியர்கள் விசா பெறவேண்டியது அவசியமாகும். ஆனால், இந்தியர்கள் விசா இல்லாமல் 58 நாடுகளுக்குச் செல்லலாம்.

ஜனவரி 2024 நிலவரப்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் 62 நாடுகளுக்கு செல்லலாம் என்ற நிலையில், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி , 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாஸ்போர்ட் தரவரிசை 81 ஆக குறைந்ததால், இந்தியர்கள் தற்போது 58 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும்.

இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள்

அங்கோலா, பார்படாஸ், பூட்டான், பொலிவியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், புருண்டி, கம்போடியா, கேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், குக் தீவுகள், டிஜிபூரி, டொமினிகா, எத்தியோப்பியா, பிஜி, கிரெனடா, கினியா-பிசாவ், ஹைதி, இந்தோனேசியா, ஈரான், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, கிரிபட்டி, லாவோஸ், மக்காவ், மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மார்ஷல் தீவுகள், மொரிஷியஸ், மைக்ரோனேஷியா, மங்கோலியா, மொன்செராட், மொசாம்பிக், மியான்மர், நமீபியா, நேபாளம், நியுவே, பலாவ் தீவுகள், கத்தார், ருவாண்டா,ம் சமோவா, செனகல், சீஷெல்ஸ், சியரா லியோன், சோமாலியா, இலங்கை, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், தான்சானியா, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துவாலு, வனுவாட்டு, ஜிம்பாப்வே ஆகிய 58 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.