தமிழ்நாடு

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!
பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை
மதுரை விமான நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர் லட்சுமணன் வீர மரணம் அடைந்து உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையம் வந்த தமிழக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருந்த தற்போது அதிமுகவில் இருக்கும் டாக்டர்.சரவணன் தலைமையிலான அணியினர் வந்தபோது யார் முதலில் மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினருக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டது.

அந்த சம்பவத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் காரில் காலனி வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பெண்கள் உட்பட அமைச்சர் காரை முற்றுகையிட்டும் காலணி வீசியது யார் என்பது குறித்தும் வீடியோ காட்சிகள் மூலம் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 பேரில் தற்போது கொலை செய்யப்பட்ட மதுரை மத்திய தொகுதி மாநகர் பாஜக மகளிரணி பொறுப்பில் இருக்கும் சரண்யாவும் அமைச்சர் காரில் காலனி வீசிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்களால் அறிவாளால் தலையை துண்டாக்கி கொடூமான முறையில் கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இவர் சமீப காலமாக மதுரையில் நடைபெறும் எந்த கட்சி நிகழ்ச்சிகளும்., கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

மதுரை மத்திய தொகுதியில் பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்த சரண்யாவை கொடூரமான முறையில் தலையை துண்டித்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் கணவரை பிரிந்து இரண்டாவது கணவராக மதுரை மேலூர் சேர்ந்த பாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் வாலனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ள நிலையில் சரண்யாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் சரண்யாவிற்கும், பாலனின் முதல் மனைவி குடும்பத்தாருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததால் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள உதயசூரியபுரம் பகுதியில் வசித்து வந்ததாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. தொடர்ந்து, சரண்யா கொலை சம்பவத்தில் பாலனின் முதல் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அமைச்சர் பி.டி.ஆர் மீது காலணி வீசிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சரண்யா கொடூரமான முறையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பாஜகவினிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் அமைச்சரின் ஆதரவாளர்கள் செயல்பட்டார்களா? குடும்ப தகராறு காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

தலை துண்டிக்கப்பட்ட சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.