சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வைர நகை வியாபாரி சந்திரசேகரிடம் 23 கோடி மதிப்பில் வைரம் வேண்டும் மற்றொரு வியாபாரி கேட்டுள்ளார். இதையடுத்து வடபழனியில் உள்ள பிரபல ஓட்டலுக்கு வைரத்தை கொண்டு வரும்படி கூறியதால் சந்திரசேகர் 23 கோடி மதிப்புள்ள வைர நகைகளுடன் அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த 4 பேர் சந்திரசேகரை கட்டி போட்டுவிட்டு வைர நகைகளுடன் காரில் தப்பிச் சென்றனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த வடபழனி போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தப்பியோடிய கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வைரத்தை திருடிவிட்டு தப்பிய 4 பேரை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகாசி அருகே காரில் சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது லண்டன் ராஜன், அவரது நண்பர், உதவியாளர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கொள்ளையர்களை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் எத்தனை பேருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் நகை வியாபாரி சந்திர சேகரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வைரத்தை மீட்ட போலீசார், காருக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர்.