சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களிலும் புறநகரங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையில் இருந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கே.கே நகர், சாலிகிராமம், அசோக் நகர், கோயம்பேடு, RA புரம், கோட்டூர்புரம், சைதாபேட்டை, ரெட்ஹில்ஸ், உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் வசிக்கும் அலங்காரநாதன் குற்றாலநாதன் என்ற தொழிலதிபர் வீடு மற்றும் அவரது நிறுவனம் அசோக் நகரில் ஏழாவது அவன்யூரில் என்சிஸ் டெக்னாலஜிஸ் மற்றும் பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் தொடர்பான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரெட்ஹில்ஸ் கோனிமேடு முத்துராமலிங்கம் தெரு, அன்னை இந்திரா நினைவு, நகரில் வசித்து வரும், EHS 360 லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த சதாம் ஹுசைன் என்பவரது வீட்டிலும், அசோக் நகர் 50 தெருவில் உள்ள EHS 360 Labs pvt. Ltd நிறுவனத்தில்,ஐந்து அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை செய்து வருகின்றனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குணசேகரன் என்ற தொழிலதிபர் வீட்டிலும், கோயம்பேடு ஜெய் நகர் 8 வது தெருவில் உள்ள அவர் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வரும் ECHO Care engineering pvt ltd நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை கேகே நகர் டாக்டர் ரங்கசாமி சாலை பகுதியில் அமைந்துள்ள மருத்துவர் வரதராஜன் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக இந்த அமலாக்கத்துறை சோதனையில் விருகம்பாக்கம் காவேரி தெரு பாண்டியன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் மாசு கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவராவார்.இவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு பதிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இவரது வீடு மற்றும் இவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்தை விட அதிக அளவு லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் துறை இயக்கத்தின் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பாண்டியன் தொடர்பாக 18 மணி நேரமாக நடைப்பெற்ற சோதனையில் 1.37 கோடி, 3 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.லஞ்ச புகாரில் சிக்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முக்கியமாக சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிகளை வழங்கிய விவகாரத்தில் தரகர் போல் செயல்பட்டு லஞ்சம் வாங்கிக் கொண்டு பணிபுரிந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் தெரியவந்தது. எனவே இந்த லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை அடிப்படையாக வைத்து சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சட்டவிரோத பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சோதனையின் முடிவில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் முழு விவரங்களையும் தெரிவிப்பார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.