இந்தியாவிலேயே முதல்முறையாக கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை கொண்டு வரப்பட உள்ளதாகவும், உலகிலேயே முதல்முறையாக டயாலிசிஸ் நோயாளிகளுக்கு இலவச புரத ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட உள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை போரூரிலுள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் டயாலிசிஸ் சிகிச்சை மையத்தில் புதிதாக 19 டயாலிசிஸ் சிகிச்சை படுக்கைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, மண்டல குழு தலைவர் நொளம்பூர் ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் "இந்தியாவிலேயே முதல்முறையாக கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் செய்யும் வசதி கொண்டு வர உள்ளோம். முதற்கட்டமாக 50 சுகாதார நிலையங்களை தேர்வு செய்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அங்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிதித்தார்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் விலையின்றி உடனடியாக வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. 150 மி.லி பால், இரண்டு அவித்த முட்டைகளின் வெள்ளை கரு, 50 கிராம் சுண்டல் மற்றும் குறைந்த பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்த மூன்று பிஸ்கட்கள் கொண்ட தொகுப்பு டயாலிசி சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கிண்டியில் உள்ள முதியவர்களுக்கான மருத்துவமனையில் செவிலியர் ஒருவருக்கும், வார்டு பாய்க்கும் இடையே ஒரு சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைப் பெரிய செய்தியாக மாற்ற வேண்டாம். அங்கு 24 மணி நேரமும் காவல்துறையினரின் கண்காணிப்பாறை போடப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.