இந்தியா

OPERATION SINDOOR - பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அதிரடி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தரமான பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்தியர்கள் 3 பேர் உயிரிழுந்துள்ளாதாக இந்தியராணுவம் தெரிவித்துள்ளது.

OPERATION SINDOOR - பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அதிரடி!
OPERATION SINDOOR - பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அதிரடி
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் பொறுப்பேற்றது. இதனையடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து, இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ந்து போய் உள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆப்ரேஷன் சிந்தூர் (OPERATION SINDOOR) என்பதற்கு பொருள், பெண்கள் நெற்றில் வைக்கும குங்குமத்தை குறிக்கவே, ராணுவ நடவடிக்கைக்கு சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்டதாகவும், பல பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் உள்ள முசாபராபாத், கோட்லி, குல்பூர், பிம்பர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட், சக் அமரு, முரிட்கே, பஹவல்பூர் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து பதிவிட்ட இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்த நிலையில், நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது. ஜெய் ஹிந்த் என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.