இரண்டு சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்குமிடையே யார் முதலில் பெட்ரோல் போடுவது என வாய்தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் பதிலுக்கு பதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு சம்பவ இடத்திலிருந்து, தங்களது இரு தரப்பினரும் அவர்களது குடியிருப்புப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
ஆனால், ஒரு சமூகத்தை சார்ந்த இளைஞர்கள் இரண்டு, இருசக்கர வாகனங்களில் சென்று மற்றொரு தரப்பினரை பின்தொடர்ந்து சென்று மற்றொரு தரப்பினரும் பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில், இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டும், அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சம்பவமானது குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பிடித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் போடுவதால் ஏற்பட்ட இந்த பிரச்சினையை சில மர்ம நபர்கள், கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னையாக திசைமாற்றியுள்ளனர். இந்த மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு, 6 பேர் காயம், வீடுகள், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், இச்சம்பவம் தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் பரவியது.
இது தொடர்பாக புதுகோட்டை காவல்துறை சமுகவலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளனர். இரு சமூகத்தினர் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் தலீத் சமூகத்தினர் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளகுக்கு தலையில் வெட்டுக்காயம் என்று பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், மேலும் இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், கலவரம் தொடர்பாக 14 பேரை கைது செய்துள்ளதாகவும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளனது.