தமிழ்நாடு

S-400 செயலிழந்ததாக பரவும் தகவலுக்கு பாதுகாப்பு துறை மறுப்பு!

இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் S-400 ' சேதமடைந்துள்ளதாகவும், செயலிழந்துள்ளதாகவும் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

S-400 செயலிழந்ததாக பரவும் தகவலுக்கு பாதுகாப்பு துறை மறுப்பு!
S-400 செயலிழந்ததாக பரவும் தகவலுக்கு பாதுகாப்பு துறை மறுப்பு!
இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவம் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை தாக்கி செயலிழக்க வைத்ததாக பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது. S-400 வான் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்து, நல்ல முறையில் செயல்பட்டு வருவதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

'S-400 சுதர்சன் சக்ரா'

கடந்த 8 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவின் மீது தொடர் டிரோன் தாக்குதல் நடத்தியநிலையில், இந்திய ராணுவத்தினர் 'S-400 சுதர்சன் சக்ரா' என்ற ஏவுகணை மூலம் தடுத்து நிறுத்தினர். ஆசியா கண்டத்தில் இந்தியாவிடம் மட்டுமே S-400 வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சுதர்சன சக்ரா என அழைக்கப்படும் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பானது ரஷியாவால் உருவாக்கப்பட்டது. 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் நமது எல்லையை நோக்கி வரும் இலக்கை அடையாளம் காணும் திறன் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், 400 கிலோ மீட்டர் ரேஞ்ச் வரை பாய்ந்து, இடைமறித்து இலக்குகளை தகர்க்கக்கூடிய வல்லமையை கொண்டுள்ளது.

இந்தியாவின் வான் கேடயம்:

S 400 சக்ரா சுதர்சன் எதிரிகள் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த முயற்சியில், விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் ஏவும் போது, அதனைக் கண்டுபிடித்து தாக்கும் திறன் கொண்டது.

S 400 சக்ரா சுதர்சன் சிறப்புகள்:

காஷ்மீர் முதல் குஜராத் வரை 1800 கி.மீ. நீள எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன்களை வீழ்த்தியது. இதன் செயல்பாட்டு திறன் 400 கி.மீ தூரத்தில் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்த ரக ஏவுகனையை ரஷ்யாவிடமிருந்து, 10,700 கோடி கொடுத்து இந்தியா வாங்கியுள்ளது. இதனை ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது, புதிய இடத்தில் 5 நிமிடத்தில் நிறுவலாம். மேலும், கண்காணிப்பு வரம்பு 360 டிகிரி எஸ் 400ல உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 9M96E - 120 கி.மீ, 48N6E2 - 200 கி.மீ, 48N6DM - 250 கி.மீ, 40N6E400 400 கி.மீ வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது.