விளையாட்டு

மேக்ஸ்வெல்லுடன் தொடர்புபடுத்தி பேசிய ரசிகர் - கடுப்பான ப்ரீத்தி ஜிந்தா

சமூக வலைதளத்தில் பஞ்சாப் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெலுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய ரசிகருக்கு நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரித்தி ஜிந்தா கோபமாக பதிலளித்துள்ளார்.

மேக்ஸ்வெல்லுடன் தொடர்புபடுத்தி பேசிய ரசிகர் - கடுப்பான ப்ரீத்தி ஜிந்தா
மேக்ஸ்வெல்லுடன் தொடர்புபடுத்தி பேசிய ரசிகர் - கடுப்பான ப்ரீத்தி ஜிந்தா
தமிழில் வெளியான உயிரே திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ப்ரீத்தி ஜிந்தா தற்போது, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளராக வலம் வருகிறார். பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும், மைதானத்திற்கு வருகை தந்து ரசிகர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.

கடந்த சீசன் வரையிலும் லீக் போட்டியிலேயே நடையை கட்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி, தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்று, தொடர்ந்து விளையாடி வருகிறது. இப்படி தொடர் வெற்றிகளை குவித்து வரும் பஞ்சாப் அணிக்கு தொடர்ந்து ப்ரீத்தி ஜிந்தா உற்சாகமளித்து வருகிறார். இந்நிலையில், பஞ்சாப் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் உடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய ரசிகருக்கும் நடிகை ப்ரித்தி ஜிந்தா பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா தனது எக்ஸ் தளத்தில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். ஐ.பி.எல் குறித்தும் தனது அணி குறித்தும் , தனது சினிமா வாழ்க்கை குறித்தும் பதிலளித்து வருகிறார். பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்காக திரும்பிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லின் தற்போதைய ஐபிஎல் 2025 இல் மோசமான செயல்பாட்டிற்குக் காரணம் "அவரும் நடிகையும் திருமணம் செய்து கொள்ளவில்லை" என்பதுதானா என்று பயனர் நகைச்சுவையாகக் கேட்டார்.

இந்த கேள்வி ஜிந்தாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், "இதே கேள்வியை மற்ற அணிகளின் ஆண் உரிமையாளர்களிடமும் கேட்பீர்களா, அல்லது பெண்களுக்கு மட்டும்தான் இந்த பாகுபாடு இருக்கிறதா? நான் கிரிக்கெட்டில் நுழையும் வரை, பெண்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியாது" என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கேள்வியை நீங்க நகைச்சுவையாத்தான் கேட்டீங்கன்னு நான் நிச்சயமா நம்புறேன், கடந்த 18 வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டு நான் என் மதிப்புக்கு மதிப்புக் கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன் என்று தெரிவித்து ப்ரீத்தி ஜிந்தா, அதனால எனக்கு மரியாதை கொடுங்க, பாலினப் பாகுபாட்டை நிறுத்துங்க. " என அவர் அந்த நபருக்கு கொடுத்த பதில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த நபர் அந்த கேள்வியை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.