தமிழ்நாடு

சிறப்பு கல்வி உதவி தொகை இல்லை.. படிப்பை தொடர முடியாத நிலை.. நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

சிறப்பு கல்வி உதவி தொகை, அரசு உதவித்தொகை, படிப்பை தொடர முடியாத நிலை, சென்னை, நீதிமன்றம், பொதுநலவழக்கு, பட்டியலின பழங்குடியின மாணவர்கள், Special education scholarship, government scholarship, inability to continue studies, Chennai, court, public interest litigation, Scheduled Tribe students

சிறப்பு கல்வி உதவி தொகை இல்லை.. படிப்பை தொடர முடியாத நிலை.. நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
சிறப்பு கல்வி உதவி தொகைக்காக நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு!
சிறப்பு கல்வி உதவி தொகையை அரசு வழங்காததால், 55 ஆயிரம் பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் பாதிக்கப்பட்டு, கல்வி தொடர முடியாத நிலை உள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2024-25 ம் ஆண்டிற்கான பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான சிறப்பு கல்வி உதவி தொகையை, கல்வியாண்டு முடியும் முன் வழங்க, அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சுதாகர் சென்னை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் 10 வகுப்பிற்கு பின் கல்வியை தொடரும் வகையில் சிறப்பு கல்வி உதவி தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2022-23 ம் ஆண்டில் 77 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு 26,219 மாணவர்களுக்கள் பயனடைந்தாகவும், 2023-24 ம் ஆண்டில் 89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 29,052 பட்டியலின பழங்குடி மாணவர்கள் பயனடைந்தாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆனால் 2024 - 2025 ம் கல்வியாண்டிற்கான சிறப்பு கல்வி உதவி தொகை இது வரை வழங்காததால் 50 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் கல்வியை இடையிலேயே கைவிடும் சூழல் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2024- 2025 ம் ஆண்டிற்கான பட்டியலின பழங்குடியின மாணவர்களுக்கான சிறப்பு கல்வி உதவி தொகையை விரைந்து வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், இத்திட்ட விதிகளின்படி உரிய காலத்தில் உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.