உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா, 2025 மே 13ஆம் தேதியான நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், கவாய் பதவியேற்றுக் கொண்டார். சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அறிவிக்கப்பட்டார். 14 ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபின், 2019ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி உயர்வு பெற்றார். கவாய் தற்போது, 2025 நவம்பர் 23ஆம் தேதி ஓய்வுபெறும் நிலையில், 6 மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணமதிப்பிழப்பை உறுதி செய்தது, SC-ST-ல் உட்பிரிவுகளுக்கு அனுமதி, ஜம்முகாஷ்மீர் 370வது சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் அவர் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்வில் உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர், முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் குடியரசுத்தலைவருக்கு கெடு விதித்ததன் காரணமாக வார்த்தைப் போரில் ஈடுபட்ட நிலையில், பி.ஆர்.கவாய்-க்கு ஜெக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்தார். நாக்பூரில் இருந்து இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்ற 3வது நபர் பி.ஆர்.கவாய் ஆவார். முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பிறகு தலைமை நீதிபதியாக பதவியேற்ற 2வது பட்டியலின நீதிபதி கவாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பி.ஆர்.கவாய்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதியில் 1960 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி பிறந்தவர் நீதிபதி பி.ஆர். கவாய், இவரது குடும்பம் சிறந்த பொதுச்சேவை பின்னணி கொண்டது. இவரது தந்தை, மறைந்த ஆர்.எஸ்.கவாய், பீகார், கேரள மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1985 ஆம் ஆண்டு முதன்முதலாக தனது சட்டப் பணியைத் தொடங்கினார்.
ஆகஸ்ட் 1992 மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞர்
2000ஆம் ஆண்டு நாக்பூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்
2003, நவம்பர் 14 -ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி
2019, மே 24 -ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு
மே 14, 2025 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி