தமிழ்நாடு

தமிழகத்தில் 34 மருத்துவக் கல்லூரிகளுக்கு NMC நோட்டீஸ்!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு குறித்து உரிய விளக்கம் அளிக்க 34 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் 34 மருத்துவக் கல்லூரிகளுக்கு NMC நோட்டீஸ்!
தமிழகத்தில் 34 மருத்துவக் கல்லூரிகளுக்கு NMC நோட்டீஸ்!
நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளித்தல், அவற்றைப் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பேராசிரியர்கள் பற்றாக்குறை, காலிப் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி சென்னை மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர, தமிழகத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 துறைகளில் 19 துறைகளுக்கு போதிய பேராசிரியர்கள் இல்லை என்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 துறைகளில் 8 துறைகளுக்கு போதிய பேராசிரியர்கள் இல்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் சரியான நேரத்தில் கவுன்சிலிங் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாததால் காலியிடங்களை நிரப்புவது சாத்தியமில்லை என்றும் 2024 ஆம் ஆண்டில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களில் 30% காலியிடங்கள் இருக்கிறது என்றும் மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது. இதனிடையே கலந்தாய்வு மூலம் பேராசியர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில நாட்களில் பணியில் பேராசிரியர்கள் சேர்வார்கள் எனவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி தெரிவித்துள்ளார்.