9 நாட்கள்... ஒவ்வொரு 90 வினாடிக்கும் ஒரு அதிர்வு... அச்சத்தில் உறைந்த விஞ்ஞானிகள்

தொடர்ந்து 9 நாட்களாக விஞ்ஞானிகளை அச்சுறுத்திய அதிர்வலைகள் கிழக்கு கிரீன்லாந்து நாட்டிலிருந்து வந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Sep 14, 2024 - 19:39
 0
9 நாட்கள்... ஒவ்வொரு 90 வினாடிக்கும் ஒரு அதிர்வு... அச்சத்தில் உறைந்த விஞ்ஞானிகள்
climate change mega tsunami landslide

மனிதர்களின் பல்வேறு செயல்கள் காரணமாக உலகம் மிகவும் வேகமாக வெப்பமயமாகி வருகிறது. இதன் விளைவாக துருவங்களில் உள்ள பனிப்பறைகளும் நிரந்தர உரைபனிக்கட்டிகளும் வேகமாகக் கரைந்து வருவதோடு பனிச்சரிவுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இந்த பனிச்சரிவுகள் சில நேரங்களில், நீர்நிலைகளில் விழுந்து, புவியின் தகடுகளில் இடித்து அவற்றை இடமாற்றம் செய்து, சுனாமி எனப்படும் ராட்சத அலைகளைத் தூண்டுகின்றன. இது மெகா சுனாமி என்றழைக்கப்படுகிறது. தற்போது உள்ள கால நிலை மாற்றத்தால் இதுபோன்ற மெகா சுனாமிக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. 

இந்நிலையில், கிழக்கு கிரீன்லாந்து நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு பயங்கரமான மெகா சுனாமி ஏற்பட்டுள்ளதாகத் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா சுனாமி உலகையே அதிரவைத்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பரில் நில அதிர்வு சமிக்ஞை உலகெங்கிலும் உள்ள சென்சார்களால் கண்டறியப்பட்டது. அப்போது இது எங்கிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். கிரீன்லாந்தில் தான் இந்த மெகா சுனாமி ஏற்பட்டுள்ளதாக சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், “கால நிலை மாற்றத்தின் காரணமாக உலகில் வெப்பம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன. இப்படிதான் கிழக்கு கிரீன்லாந்தில் உள்ள கிரீன்லாந்து ஃபிஜோர்ட் எனப்படும் பனிப்பாறையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு பிரமாண்ட பனிக்கட்டி உடைந்து நீருக்குள் விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட ஒரு மெகா சுனாமி, பனிப்பாறைகளின் நடுவே சிக்கியுள்ளது. இந்த மெகா சுனாமி அலை முன்னும் பின்னுமாக சுமார் 9 நாட்கள் வரை நகர்ந்துகொண்டிருந்திருக்கிறது. இந்த நகர்வினால் ஏற்பட்ட அதிர்வலைகள்தான் உலகெங்கிலும் உள்ள சென்சார்களால் கண்டறியப்பட்டது. தொடர்ந்து 9 நாட்களுக்கு, ஒவ்வொரு 90 வினாடிக்கும் இந்த அதிர்வலைகள் ஏற்பட்டன” என தெரிவித்தனர். 

இந்த மெகா சுனாமி குறித்து வெளியான சாட்டிலைட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கிரீன்லாந்து ஃபிஜோர்ட் பனிப்பாறையின் மீது கருமேகம் சூழ்ந்திருப்பது போன்று இருக்கிறது. இந்த புகைப்படம் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow