நாளை கூடுகிறது காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம்- முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் வக்ஃபு வாரிய சொத்துகளை ஒழுங்குப்படுத்த வழிவகுக்கும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்ற கூட்டுக்குழு மசோதா குறித்து ஆய்வு செய்து, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.இந்த நிலையில் வார விடுமுறை மற்றும் ரமலான் விடுமுறை முடிந்து இன்று (ஏப்.1ம் தேதி) நாடாளுமன்றம் கூட உள்ளது.
Read more: IPL 2025: கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி
மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்.4ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரிலேயே வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் நாளை (ஏப்.2ம் தேதி ) நடைபெற உள்ளது. இதில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?






