IPL 2025: 2-வது வெற்றி யாருக்கு? லக்னோ - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 13வது லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

2025 ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் 23 ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் தொடர் இன்று 13 லீக் போட்டியை எட்டியுள்ளது. லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாய்பாய் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமயிலான லக்னோ சூப்பர் அணியும் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
லக்னோ அணி இதுவரை நடந்த 2 போட்டிகளில், டெல்லி அணியுடனான போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் தோல்விக்கு பிறகு கடுமையான விமர்சனங்களை பெற்ற லக்னோ, சன்ரைசர்ஸை வீத்தியதன் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பஞ்சாப் அணி தன்னுடைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவது வெற்றியை நோக்கி லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
நேருக்கு நேர்:
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ அணி 3 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
உத்தேச ப்ளேயிங் லெவன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
ரிஷப் பந்த் (கேப்டன்), டிஏ மில்லர், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், ஏ படோனி, ஏகே மார்க்ராம், எம்ஆர் மார்ஷ், ரவி பிஷ்னோய், பி யாதவ், அவேஷ் கான், ஷர்துல் தாக்கூர்.
பஞ்சாப் கிங்ஸ்:
எம் ஜான்சன், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், பி சிம்ரன் சிங், எஸ் ஐயர் (கேப்டன்), சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஜிஜே மேக்ஸ்வெல், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஷஷாங்க் சிங், எம்பி ஸ்டோனிஸ், யுஸ்வேந்திர சாஹல்ன், ஜாஷ் இங்கிலீஸ்
What's Your Reaction?






