IPL 2025: தொடர் தோல்வியில் மும்பை.. 36 ரன்கள் வித்தியாத்தில் குஜராத் அபார வெற்றி!
GT vs MI: ஐபிஎல் 2025 டி20 தொடரில் 9 லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைடன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 63 விளாசினார்.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் 18-வது சீசன் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு (மார்.29) குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 9-வது லீக்க் ஆட்டத்தில், குஜராத் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
அதிரடி காட்டிய சாய் சுதர்சன்
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாய் சுதர்ஷன், கேப்டன் சுப்மன் கில் ஜோடி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் சுப்மன் கில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் அரைசதம் விளாசினார். ஜாஸ் பட்லர் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த ஷாருக்கான் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 12 ஓவரில் சாய் சுதர்சன் 41 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தீபக் சாஹர் பந்துவீச்சில் ரூதர்போர்ட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் திவேட்டியா டக் அவுட் ஆக, ரஷிட் கான் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தடுமாறிய மும்பை
197 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் ஜோடிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்து. முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதனை தொடர்ந்து, 4 வது ஓவரில் ரிக்கல்டன் 6 ரன்னில் அவுட் ஆனார். திலக் வர்மா, சூர்யகுமார் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 39 ரன்களில் திலக் வர்மாவும், அடுத்துவந்த ராபின் மின்ஸ் 3 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நமன் தீர் மற்றும் மிட்செல் சாட்னர் இருவரும் 18 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
புள்ளிப்பட்டியல் கடைசி இடம்
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில், ரன் ரேட் அடிப்படையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால், புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
What's Your Reaction?






