விளையாட்டு

இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள்.. காதலியை ரகசிய திருமணம் செய்த ஆர்.சி.பி. வீரர்!

பாலியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காதலியை ரகசியமாக ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள்.. காதலியை ரகசிய திருமணம் செய்த ஆர்.சி.பி. வீரர்!
Yash Dayal
ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வரும் யாஷ் தயாள், கடந்த 2025-ஆம் ஆண்டு கோப்பையை வென்ற அணியில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்த ஆண்டும் அவர் மீண்டும் களமிறங்கத் தயாராகி வரும் நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர் மீதான வழக்குகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

சமூக வலைதளப் பிரபலம் ஸ்வேதாவுடன் திருமணம்

யாஷ் தயாள், தனது காதலியும் சமூக வலைதளங்களில் பிரபலமானவருமான ஸ்வேதா பண்டிரை கடந்த பிப்ரவரி 4, 2026 அன்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. நொய்டாவில் நடந்த இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். ஸ்வேதா பண்டிர் இன்ஸ்டாகிராமில் சுமார் 5.8 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள ஒரு செல்வாக்கு மிக்க நபர் (Influencer). யாஷ் தயாள் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இருக்கும் வீடியோவை பகிர்ந்து இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

நீடிக்கும் பாலியல் புகார்கள்

திருமணம் ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், யாஷ் தயாள் மீது இரண்டு முக்கியப் பாலியல் புகார்கள் நிலுவையில் உள்ளன. திருமண ஆசை காட்டி 5 ஆண்டுகள் வன்புணர்வு செய்ததாகக் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதேபோல், 2023-இல் ஜெய்ப்பூரில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.