இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தெற்கு லெபனானில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக நேற்று (ஏப். 23) அறிவித்திருந்தார். இரு நாட்டுத் தலைவர்களும் விரைவில் அமெரிக்கா வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த அறிவிப்புகள் வெளியான குறுகிய காலத்திலேயே இஸ்ரேல் ராணுவம் லெபனானின் தெற்கு மாகாணங்களைக் குறிவைத்துத் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஏவுகணை வீச்சுக்கு இஸ்ரேல் பதிலடி
இஸ்ரேலின் ஷலோமி பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று இரவு ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, லெபனானின் கிர்பெட் சலாம் மற்றும் துலின் பகுதிகளில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா படையினரின் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தளவாடங்கள் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தொடரும் ஈரான் - இஸ்ரேல் மோதல்
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தீவிரமடைந்தது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் களமிறங்கியதால், இஸ்ரேல் - லெபனான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. போர்நிறுத்த ஒப்பந்தங்கள் ஒருபுறம் பேச்சுவார்த்தையில் இருந்தாலும், எல்லை தாண்டியத் தாக்குதல்கள் குறையாதது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7