இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 'எண் 7' என்பது வெறும் இலக்கமல்ல, அது தோனியுடன் பின்னிப்பிணைந்த ஒரு உணர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தோனி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தான் 7-லிருந்து 8 என்ற எண்ணுக்கு மாறப்போவதாகத் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
தோனியின் மர்மமான அறிவிப்பு
அந்த வீடியோவில் பேசும் தோனி, "சில எண்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிடும், அப்படித்தான் 7 என்ற எண்ணும் எனக்கு அமைந்தது. ஆனால், இன்று நான் 8-ஆம் எண்ணுக்கு மாறுகிறேன். இது எதனால் என்பது விரைவில் உங்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்துள்ளார். ஜூலை 7-ஆம் தேதி பிறந்தவர் என்பதால் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் 7 என்ற எண்ணையே அவர் பயன்படுத்தி வந்தார். சச்சின் டெண்டுல்கரின் 10-ஆம் எண் ஜெர்ஸியைப் போலவே, தோனியின் 7-ஆம் எண் ஜெர்ஸியையும் பிசிசிஐ (BCCI) கௌரவப்படுத்தி, அதை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பர உத்தியா?
தோனியின் இந்தத் திடீர் மாற்றம் குறித்துக் கிரிக்கெட் வல்லுநர்கள் வேறு விதமாகக் கணிக்கின்றனர். தோனி இதுபோன்று மர்மமான பதிவுகளை இடுவது இது முதன்முறையல்ல. கடந்த காலங்களிலும் புதிய பிராண்ட் விளம்பரங்களுக்காகவோ அல்லது தனது வணிக ரீதியான அறிவிப்புகளுக்காகவோ இது போன்ற பதிவுகளை அவர் பகிர்ந்துள்ளார். எனவே, இந்த 'எண் 8' மாற்றமும் ஏதேனும் ஒரு புதிய விளம்பரம் அல்லது வணிகத் தொடக்கம் தொடர்பானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
மார்ச் 28-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் இந்த மாற்றத்தால் சற்று குழப்பமடைந்துள்ளனர். இருப்பினும், மைதானத்தில் தோனி தனது வழக்கமான 7-ஆம் எண் ஜெர்ஸியிலேயே களமிறங்குவார் என்றும், இது ஒரு சிறிய 'சஸ்பென்ஸ்' மட்டுமே என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

LIVE 24 X 7