RR vs CSK: தொடர் தோல்வியில் சிஎஸ்கே... முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்!

2025 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.

Mar 31, 2025 - 01:59
Mar 31, 2025 - 02:25
 0
RR vs CSK:  தொடர் தோல்வியில் சிஎஸ்கே... முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்!
RR vs CSK: தொடர் தோல்வியில் சிஎஸ்கே... முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்!

ஐபிஎல் 18 வது சீசன் 11-வது போட்டியில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். ஜெய்ஸ்வால் கலீல் அகமது பந்தில் அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து களமிறங்கிய நித்திஷ் ராணா அதிரடியாக விளையாடினார். இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், நூர் அகமது பந்துவீச்சில் ரச்சினிடம் கேட்ச் கொடுத்து 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் தன் பங்கிற்கு 37 ரன்களில் பத்திரனா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய துருவ் ஜுரல் 3 ரன்னிலும், வனிது ஹசரங்கா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷிம்ரன் ஹெட்மயர் 19 ரன்களில் பத்திரனா பந்துவீச்சில் சிக்கினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் கலீல் அகமது டக் அவுட் ஆனார். குமார் கார்த்திகேயா 1 ரன்னிலும், மகேசு தீக்சனா 2 ரன்னிலும், துஷார் தேஷ்பாண்டே1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 குவித்தது. 

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கிய களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பமே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.  சிஎஸ்கேவின் ஓப்பனர்களாக களமிறங்கிய இரச்சின் இரவீந்திரா 4 பந்துகளை  எதிர்கொண்ட நிலையில், ரன் எடுக்காமல் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் அடுத்து களமிறங்கினார். ராகுல் திருப்பாதியுடன் ஜோடி சேர்ந்த ருத்துராஜ் அதிரடியாகி விளையாடி அரைசதம் கடந்தார்.  ராகுல் திருப்பாதி 19 பந்துகளில் 23 ரன்களை எடுத்த நிலையில், வனிது ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  

அடுத்து இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஷிவம் துபே 2 சிக்சர்களுடன்  10 பந்துகளில் 18 ரன்களை எடுத்த நிலையில், வனிது ஹசரங்கா பந்து வீச்சில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் 6 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தோனி இறுதிவரை விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், ஜடேஜா மற்றும் தோனி அதிரடியாக விளையாடினார். 16 ரன்களுடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், சந்தீப் சர்மா பந்து வீச்சில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து தோனி ஆட்டமிழந்தார்.  ஜேமி ஓவெர்டொன் அடுத்து களமிறங்கிய நிலையில் 11 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில்,  6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணியின் வனிது ஹசரங்கா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது. 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னை அணி ஒருமுறை கூட 175 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வெற்றி பெற்றதில்லை.  நடப்பு தொடரில் பெங்களூரு அணியுடனான் போட்டியில் ஆர்சிபி அணி இலக்காக நிர்ணயம் செய்த 197 ரன்கள் எட்டிப்பிடிக்க முடியாமல் 50 ரன்கள் வித்தியாசத்தில், தோல்வியை தழுவியது. இன்றையப்போட்டியில், ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இப்படி தொடர்ந்து எதிரணி நிர்ணயிக்கும் ரன்களை அடிக்க முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow